பக்கம்:கற்சுவர்கள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி Í 3 5

அதிகமான பணச் செழிப்பில் மனிதர்களும் கெட்டுப் போய் அழுகி நாறுகிறார்களோ என்று சிந்தித்தான் அவன்.

அப்போது அவனுக்குச் செய்ய வேண்டிய கோயில் மரியாதைகளை எல்லாம் செய்து முடித்தவுடன் குருக்களே அவனருகே வந்து பேசத் தொடங்கினார்:- -

சின்னராஜா இன்னமே மலேசியாவிலே போய் இருக் கிறது சாத்தியமில்லே, இங்கேயே ஊரிலே தங்கி அரண் மனையோட இருந்து பொறுப்புக்களைக் கவனிக்க வேண் டியது தான். பெரியவர் அநேகமா ஒண்னும் மீதம் விட்டு வைக்கலே. எல்லாச் சொத்துச் சுகங்களையும் சீரழிச்சுட் உார், இனிமே நீங்க தலையெடுத்து இந்தச் சமஸ்தானத் திலேயே ஏதாவது மீதப்படுத்தினால்தான் உண்டு.'

"எனக்கு உங்க பேரன் வயதுகூட ஆகலியே குருக்களே? எதுக்கு இந்தச் சின்னராஜா, பெரியராஜாப் பட்டம் எல்லாம்? சும்மா "தனசேகரா'ன்னு என்னைப் பேர்ச் சொல்லிக் கூப்பிடுங்க சாமி! ராஜாவாவது, கூஜாவாவது? அதெல்லாம் இப்பக் கிடையாது. மரியாதை வேறே, பிரியம் வேறே, மரியாதை மட்டுமே காண்பிச்சிங்கன்னா நீங்க என்னை இன்னும் அந்நியமாகத்தான் நினைக்கிறீங் கன்னு அர்த்தம். பிரியம் காமிச்சிங்கன்னாத்தான் நீங்க என் மேலே உண்மையா அன்பு செலுத்தறிங்கன்னு அர்த்தம், எனக்கு உங்க மரியாதையைவிட உள் ளன்புதான் முக்கியமா இப்போ வேணும் சாமி! எங்கப்பா சங்கதி வேறே, அவருக்குப் பணம்தான் கடவுள். பணம் தான் உலகம். மானம், மரியாதை, கெளரவம் எல்லாமே பணம்தான் அவருக்கு. ஆனால் அந்தப் பன ஆதிக்கக் காலம் அவரோடு முடிந்து போய் விட்டது.'

குருக்கள் நெருங்கிக் காதருகே வந்து நின்று கொண்டு தணிந்த குரலில், "கோவில் நகை நட்டுகளை எல்லாம் கூட வித்து சாப்பிட்டாச்சு; என்னைப் போலொத்தவங்கி, எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் உங்கப்பா கேட்கலே" என்று தனசேகரனிடம் சொன்னார். * . . . . . .3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/137&oldid=553109" இலிருந்து மீள்விக்கப்பட்டது