பக்கம்:கற்சுவர்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - H 3.

மகாராஜா காலமான மறுநாள் இரவு ஏழே முக்கால் - மணியளவில்தான் தனசேகரனும் அவன் மாமாவும் சென்னை வரமுடியும் என்றிருந்ததால் அடுத்த நாள் இரவை யும் விட்டு மூன்றாம் நாள் அதிகாலையில்தான் காலஞ் சென்ற ரர்ஜாவின் இறுதிச் சடங்குகளைச் செய்வதென்று முடிவாகி இருந்தது. -

பீமநாதபுரம் நகரின் மேற்குக் கோடியில் அரச குடும் பத்துக்குச் சொந்தமான தனி மயானம் ஒன்று அடர்ந்த தோட்டமாகக் காடு மண்டியிருந்தது. சமஸ்தானத்தின் வம்ச பரம்பரை முழுவதும் அந்த மயானத்தில்தான் இறுதி யாத்திரையை முடித்துச் சாம்பலாகியிருந்தது. அங்கேதான் அரண்மனை வெட்டியான்கள் காட்டைச் செதுக்கி இறந்து போன மகாராஜாவின் சடலத்துக்கு எரியூட்ட இறுதியிடம் தயாரித்துக் கொண்டிருந்தார்கள். சமஸ்தானத்துக்குச் சொத்தமான காட்டிலிருந்தே சந்தனக் கட்டைகள் கொண்டு வந்து அடுக்கப்பட்டிருந்தன. மகாராஜாவின் இறுதி யாத்திரையில் சடலத்துக்குப் பின்னால் தூவிக் கொண்டு வருவதற்காக ஒரு லாரி நிறைய ரோஜாப் பூக்களும், மல்லிகைப் பூக்களும் வேறு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தன. - -

- இறுதி யாத்திரையை எந்தெந்த வீதிகள் வழியாக வைத்துக் கொள்வது என்பது பற்றிப் போலீஸ் அதிகாரி களுக்கு ருட் விவரம் சொல்லுவதற்கு முன்னால் அரண்மனைக் காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வைக்கும் ராஜ குடும்பத்தினருக்கும் அதுபற்றிப் பல்வேறு அபிப்பிராய பேதங்கள் இருந்தன.

'நாலு ரத வீதிகளிலும் நாலு ராஜ வீதிகளிலும் சுற்றி வந்து அப்புறம் மயானத்திற்கான சாலையில் போக வேண்டும்' என்பதாக ராஜ குடும்பத்தினர் அபிப்பிராயப் பட்டனர். மேலராஜ வீதி, கீழராஜ வீதி, வடக்கு ராஜ வீதி, தெற்கு ராஜ வீதி, அதை அடுத்து அதேபோல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/15&oldid=552988" இலிருந்து மீள்விக்கப்பட்டது