பக்கம்:கற்சுவர்கள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15.2 கற்சுவர்கள்

நர்ஸ்போல இருந்து என் உடம்பை அவங்களுக்குச் செருப்பாத் தைச்சுப் போட்ட மாதிரி உழைச்சிருக்கேன். மலம, மூத்திரம்லாக்கூட அருவருப்பு இல்லாமே இந்தக் கையாலே அள்ளிப் போட்டிருக்கேன். எனக்கு நீங்க இந்த. உபகாரத்தைச் செஞ்சுதான் ஆகணும்' என்று கெஞ்சத். தொடங்கினாள். . . . ;

அவளுடைய வேண்டுகோளில் தாய்மையின் நிஷ்களங்க. மான கனிவு தொனித்தது. சுபாவத்தில் நல்லவனான தனசேகரனுக்கு அதில் எந்தச் சந்தேகமும் இருக்கவில்லை. ஆனால் அவளுக்கு மட்டும் ஒரு விதிவிலக்காக ஒரு. சலுகையை எப்படிச் செய்ய முடியும் என்றுதான் அவன் இப்போது யோசித்தான். -

"தட்டிச் சொல்லாமல் நீங்க இந்த உபகாரத்தைப் பண்ணனும்னுதான் நானும் ஆசைப்படறேன் யுவராஜா!' என்று குருக்களும் உரையாடலில் கலந்து கொண்டார். கடைசியில் தனசேகரனுக்கு ஒரே ஒரு வழிதான் புலப் பட்டது. சத்தியமான உணர்வுகள் உள்ள ஒரு நல்ல தாய்க்காக அப்படி ஒரு பொய்க்கூடச் சொல்லலாம் என்று. துணிந்தான் அவன். இந்த ஒரு பையனின் படிப்பு முதலிய செலவுகளை அரண்மனையிலிருந்தே தந்தாக வேண்டும். என்று காலஞ்சென்ற தந்தையின் டைரியில் இவனைக் கொடைக்கானல் பள்ளியில் சேர்த்த தினத்தன்று எழுதப் பட்டிருப்பதாகத் தானே மாமாவிடமும் காரியஸ்தரிடமும் ஒரு பொய்யைச் சொல்லிவிட வேண்டும் என்று மனதுக்குள் முடிவு செய்து கொண்டான் அவன். ஆனால் இந்த முடிவை. அவர்களிடம் அவன் அப்போது விவரிக்கவில்லை. "எங்கே, டைரியைப் பிரித்து அந்தப் பக்கத்தை என்னிடம் காட்டு பார்க்கலாம்' என்று மாமா தன்னிடம் ஒருபோதும் கேட்க மாட்டார் என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது. இந்த 'விஷயத்தில் மாமாவின் நாகரிகத்தையும் பண்பாட்டையும் பற்றி அவ்னுக்கு நன்கு தெரியும். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/154&oldid=553126" இலிருந்து மீள்விக்கப்பட்டது