பக்கம்:கற்சுவர்கள்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 கற்சுவர்கள்

நீங்களோ உங்களுக்கு வேண்டியவர்களோ ஏதாவது சொல்ல விரும்பினால் தாராளமாகச் சொல்லலாம்.'

இப்படித் தனசேகரன் சொல்லி முடித்த சில விநாடி களிலேயே பல்வேறு விதமான கேள்விக்கணைகள் அவனை நோக்கிக் கிளம்பின.

'ஏதோ நஷ்ட ஈடுன்னிங்களே? அது எவ்வளவுன்னு, சொல்லவியே? அதை முதல்லே சொல்லுங்கோ?’’ .

'வெறும் நஷ்ட ஈட்டுத்தொகை மட்டும் போதாது. எங்களிலே பலருக்கு ஒண்டக்கூட இடம் கிடையாது. அரண்மனைக்கு அக்கம் பக்கத்திலேயேயும் இந்த ஊரைச் சுத்தியும் நிறையக் காலி மனைகள் இருக்கு. எங்களுக்கு, வீடுகட்டிக்க ஏதாவது மனை கொடுத்தால்தான் உதவியா. இருக்கும். - .

த ன சே க ர ன் பொறுமையாக எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தான். மாம் முகத்தைச் சுளிக்க லானார். காரியஸ்தர் பட்டுக் கொள்ளாமல் நின்றார். 'காலஞ்சென்ற பெரிய ராஜாவுக்கு இருந்த பலவீனம், காரணமாக அரண்மனையில் சேர்ந்துவிட்ட ஒரு கூட்டம் , இடம் கொடுத்தால் மடத்தைப் பிடுங்கப் பார்க்கிறதே? என்று எரிச்சல் எரிச்சலாக வந்தது மாமாவுக்கு.

நாட்டியம், பாட்டு என்று தொழில்களில் இருந்து பின்னால் பெரிய ராஜாவின் ஆசைக்கிழத்திகளாக வந்து அந்த அரண்மனையில் தங்கிவிட்ட சில பெண்கள். "நாங்க நாலு காசு சம்பாதிக்க முடிஞ்ச காலத்திலே இங்கே வந்து: இவங்களுக்குத் தலையை நீட்டிட்டோம். இப்போ வயசாச்சு; வெளியேறிப் போனாலும் ஆடியோ பாடியோ சம்பாதிக்க முடியாது. நீங்களா எங்க நிலைமையைப் புரிஞ்சுக்கிட்டு நல்லவிதமா மரியாதை பண்ணி அனுப்பி னாத்தான் உண்டு" என்று ஆதங்கப்பட்டுக் கொண் டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/172&oldid=553145" இலிருந்து மீள்விக்கப்பட்டது