பக்கம்:கற்சுவர்கள்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 கற்சுவர்கள்

சொஸ்ைட்டிக்குப் பேட்ரனா இருக்கணும்' என்றார்கள்

அவர்கள்.

தனசேகரனுக்குப் பொறுமை பறிபோய்க் கொண்டி 'ருந்தது. அவன் எங்கே ஆத்திரத்தில் அவர்களிடம் காலஞ் சென்ற பெரிய ராஜாவை விட்டுக் கொடுத்துப் பேசிவிடப் போகிறானோ என்ற தயக்கத்தோடு உடனிருந்த மாமா தங்கபாண்டியனே முந்திக் கொண்டு, "அதெல்லாம் பார்த்துச் செய்யச் சொல்றேன். போங்க! இப்போ என்ன அவசரம்?' என்று வந்திருந்தவர்களுக்கு இதமாகச் சொல்லி அனுப்பி வைத்தார். அவர்கள் விடை பெற்றுக்கொண்டு போய்ச் சேர்ந்தபின் தனசேகரன் மாமாவிடம் சொல்ல ஒானான் :

"மாமா! எங்கப்பா போய்ச் சேர்ந்துட்டாலும் அவர் வச்சுட்டுப் போயிருக்கிற மிச்சம் சொச்சங்கள். பந்தபாசங் கள் லேசிலே விடாது போலேயிருக்கு. இன்னும் அரண் மனை, சமஸ்தானம்னு சொல்லி யாராவது வந்திட்டே இருக்காங்க. பணக்காரனா வாழ சட்டம் அனுமதிக்கலே, ஏழையா வாழறதை ஜனங்க அனுமதிக்கவோ ஏத்துக்கவோ தயாராயில்லே. பட த் தி ற ப் பு தர்ம பரிபாலனம் தன்கொடைன்னு எவனாவது இன்னும் என்னைத் தேடி வந்துக்கிட்டேயிருக்கானே?"

"கொஞ்ச நாளைக்கு அப்படித்தாம்பா இருக்கும்! அப்புறம் எவ்லாம் சரியாப்போயிடும். ராஜமானியம் போயிட்டாலும் ராஜாங்கிற எண்ணம் ஜனங்க கிட்டே -யிருந்து இன்னும் போகலியே? அதான் இப்படி எல்லாம்

தேடிவராங்க!' என்றார் மாமா, ... . ...

ஜெயநளினி கேஸ் முதல்நாள் விசாரணை அன்றே ஒத்திப்போடப்பட்டுவிட்டது. தனசேகரன் தரப்பு வக்கீல் வாய்தா கேட்டு வாங்கிவிட்டார். மாமாவும் தனசேகரனும் ஊருக்குத் திரும்புவதற்கு முன் பீமநாதபுரம் அரச குடும்பத்துக்கு மிகவும் வேண்டிய சேதுராஜன் சேர்வை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/210&oldid=553186" இலிருந்து மீள்விக்கப்பட்டது