பக்கம்:கற்சுவர்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 கற்சுவர்கள்

முன்னாடியே மெர்ட்டை ப்ோட்டாயிடனும்' என்று கர்ம. "சிரத்தையாக முன் வந்து வற்புறுத்திச் சொன்னார்.

மாமா தங்கபாண்டியனுக்கு அந்த நரைத்த தலைக் கிழவர்மேல் கோபம் கோபமாக வந்தது. கருகருவென்று கருள் சுருளாகக் கர்லிங் விழுந்திருந்த தனசேகரனின் அந்த அழகிய கிராப்புத் தலையையும் நரைத்த தலைக் கிழவரை யும் மாறி மாறிப் பார்த்தார். மாமா. தனசேகரன் மேல் மிகவும் அனுதாபமாக இருந்தது மாமாவுக்கு.

'இந்தக் காலத்துப் புள்ளைங்களை ரொம்பத்தான் சோதனை பண்ணாதீங்க பாட்டையா! கொஞ்சம், காலத்தை அனுசரிச்சு வழக்கங்களை விட்டுக்கொடுங்க. பாவம்: தண் சேகரன் பிரில் கிரீம் போட்டு ரொம். அழகா முடி வளர்த்திருக்கான். ஒரே நிமிஷத்திலே அதைத் தொலைச்சு டப் பார்க்கிறீங்களே?' என்று தனசேகரன் சார்பில் அந்தக் கிழவரிடம் தானே அப்பீல் செய்து பார்த் தார் மாமன. 4ಣ 7ಸೆ; கிழவர் உடு பிடிவாதிக்காரராக இருந்தார். அதெப்படி விட்டுட முடியும்: முறையின்னு ஒண்ணு இ ருக் கறி ப் ப நமக்குத் தோணுனபடியா செய்யிறது?’ என்று மீண்டும் வற்புறுத்தினார் கிழவர். அந்த நிலையில் தன் பொருட்டு ஒரு வீணான சர்ச்சை அங்கே எழுவதை விரும்பாத தனசேகரன் எது முறையோ அப்படியே நடக்கட்டும். நான் மொட்டை போட்டுக்கத் தயார். ஆளைக் கூப்பிடுங்க” என்றான். அந்தச் சமயத் திலே பெரிய கருப்பன் சேர்வை அவசர அவசரமாக மாமா தங்கப்பாண்டியனைத் தேடிக்கொண்டு வந்தார்.

'உங்க கிட்டத் தனியா ஒரு விஷயம் கன்ஸ்ல்ட் பண்ணனுமே?” -

என்ன? இப்படி இங்கே வந்துதான் சொல்லுங் களேன்' என்று காரியஸ் தரை அங்கிருந்த ஒரு தூண் மறைவுக்குத் தனியா அழைத்துக் கொண்டு சென்றா HᏰᎥᎢ{ᏗafᎢ .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/48&oldid=553020" இலிருந்து மீள்விக்கப்பட்டது