பக்கம்:கற்பக மலர்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறவிப் பெருங்கடல் 9 |

இறைவனுடைய தியானத்தைப் பற்றில்ை முதலில் மேலும் சேற்றில் அழுந்தாத கிலே வரும்; பிறகு அழுந்தும் செயல் மாறி எழும் செயல் உண்டாகும்; மெல்ல மெல்லச் சேற்றினின்றும் விடுபட்டுக் கரை சேரும் இறுதி கிலே பிறகு கிடைக்கும்.

'பிரபஞ்சமென்னும், சேற்றைக் கழிய வழிவிட்டவா!' என்று அருணகிரிநாதர் பாடுகிரு.ர்.

பிறவியைப் போக்கி வீடு பெறுவது நமக்கு உரிய லட்சியம் என்றும், அதனை அடையப் பற்று அறுத்தலே வழி என்றும், அந்த வழியை அடைய இறைவனிடம் உள்ள அன்பே துணே என்றும் இதுகாறும் சொன்ன வற்ருல் அறிந்து கொண்டோம். ஆகவே இறைவன்பால் உள்ள அன்பு, இறைவனைப் பற்றுக் கோடாகக் கொள்ளும் முயற்சி, கம்பாலுள்ள பற்றைப் போக்கி வீடுபேற்றை அடையச் செய்வதற்கு ஏதுவானது என்று தெரியவரும். இதையே கடவுள் வாழ்த்தின் இறுதிக் குறளில் திருவள்ளுவர் சொல்கிருர்.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர்; நீந்தார் இறைவன் அடிசேரா தார். - (10) இறைவன் அடியைச் சேர்ந்தவர்கள் பிறவியாகிய பெரிய கடலை ந்ேதுவர் என்பதையும், அவ்வாறு சேராதவர் நீந்த மாட்டார் என்பதையும் ஒருங்கே இந்தக் குறளில் சொன்னர். .

பிறவி என்பது எல்லையில்லாமல் தொடர்ந்து வருவதனால் அதனேக் கடலாக உருவகம் செய்தார்.'

1. காரிய காரணத் தொடர்ச்சியாய்க் கரையின்றி வரு தலின், பிறவிப் பெருங்கடல் என்ருர்’ என்று பரிமேலழகர்

விளக்குவார். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/100&oldid=553314" இலிருந்து மீள்விக்கப்பட்டது