பக்கம்:கற்பக மலர்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

急 கற்பக மலர்

கனயெல்லாம் எடுத்துச் சென்று பார்த்தாலும் அந்தக் கோட்டைக் காண முடியாது. காரணம் என்ன? அப்படி ஒரு கோடே இல்லை.

இல்லாத ஒன்றையா சின்ன வகுப்பிலிருந்து, ஈக்வேடர், பூமத்திய ரேகை, நில நடுக்கோடு என்று வெவ்வேறு பெயரால் சொல்லித் தருகிருர்கள்? அது பூமியில் இல்லே. விஞ்ஞானிகளுடைய கற்பனையில் இருக்கிறது. அதை ஒருவகை அளவாக வைத்திருக்கிரு.ர்கள். அந்தக் கோடு கற்பனையாக இருந்தாலும் அதை வைத்துக்கொண்டு போடும் கணக்கும் அதனுல் தெரிந்து கொள்ளும் உண்மை களும் கற்பனைகள் அல்ல.

ஒரு வகையில் அமுதம், கற்பகம், காமதேனு என்பன யாவும் கற்பனை என்னும் பாற்கடலில் தோன்றின என்றே சொல்லலாம். சுவையான பொருளுக்கு அமுதம் என்பது தலையளவு; அது ஒரு கற்பனே. கேட்டதையெல்லாம். தருவதற்கு ஒரு கற்பனைப் பொருள் உண்டு; அது கற்பகம். அது, தான் இருந்த இடத்தில் வந்து கேட்பவருக்கு வேண்டியதைக் கொடுப்பது. காமதேனுவோ கேட்பவர் உள்ள இடத்துக்குப் போய்க் கொடுப்பது. இந்த மூன்று கற்பனைப் பொருளையும் வைத்துப் படர்ந்த் புராணக் கதைகள் பல. - -

மனிதனுக்கு இந்த உலகத்தில் விரும்பினவை. எல்லாம் கிடைப்பதில்லை. ஆசையை மட்டுப்படுத்திக் கொண்டு தனக்குக் கிடைக்கக்கூடியதாக இருப்பதையே விரும்பிலுைம், பல சமயங்களில் கிடைப்பதில்லை. ஏழை பணம் வேண்டுமென்று விரும்புகிருன்; அவனுடைய ஆசை பத்து ரூபாய்; அது ஒரு பெரிது அன்று; ஆலுைம் அவனுக்கு அது கிடைப்பதில்ல்ே, வியாபாரி லாபத்துக்கு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/11&oldid=553221" இலிருந்து மீள்விக்கப்பட்டது