பக்கம்:கற்பக மலர்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 கற்பக மலர் இருக்கலாம். ஆனல் ஆண், பெண்ணே மணந்து மக்களேப் பெறுதல் என்பது உலகத்துக்கே பொதுவானது; இடத்தால் வேறுபடாத செய்தி. அப்படியே காலத்தால் வேறுபடாததும் உண்டு. இரவு நேரங்களில் இருளேப் போக்கி வெளிச்சத்தை உண்டாக்கப் பல உபாயங்களே மனிதன் கண்டுபிடித்தான். விளக்கு வந்தது. புதுப் புது முறைகளில் விளக்குகளே நாம் கண்டு பிடித் திருக்கிருேம். குண்டு விளக்குப் போய்க் குழாய் விளக்கு வந்திருக்கிறது. அதுவும் போய் வேறு வகை விளக்கு வரலாம். ஆனல் பகலில் நமக்கு ஒளிதரும் கதிரவனில் மாற்றம் இல்லை. நம்மால் மாற்றம் செய்யவும் இயலாது. எல்லா இடத்துக்கும் எல்லாக் காலத்துக்கும் பொதுவான ஒளியாக நிலவுகிறது அது .

அதுபோலவே கருத்துலகத்திலும் பெரும்பான்மை யான மக்களுக்குப் பல காலத்துக்குப் பயன்படும் கருத்துக்கள் உண்டு. அவற்றைச் சிந்தித்து வகைப் படுத்தித் தொகுத்து உரைத்தால் அந்தக் கருத்துக் கருவூலம் கால வெள்ளத்தில் மாயாமல் சாயாமல் கிலே நிற்கும் என்பதில் ஐயம் இல்லை. அத்தகைய கருத்துக் கருவூலக்தான் திருக்குறள். அதனால் அது, யாணர் நாட் செல்லுகினும் நின்று விளங்குகிறது.

மக்களுக்குப் பயன்படும் பொருள்களிலும் சில வகை உண்டு: அவசியத்தினுல் கொள்வன, விரும்பிக்கொள்வன, அவசியத்தாலும் விருப்பத்தாலும் கொள்வன என்று அவற்றை மூன்ருகப் பிரிக்கலாம். நோய் வந்தவனுக்கு மருந்து அவசியம்; அதை நோயாளி உண்ணுகிருன்; ஆனல் அதை அவன் விரும்பி உண்ணுவதில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/19&oldid=553229" இலிருந்து மீள்விக்கப்பட்டது