பக்கம்:கற்பக மலர்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. இடும்பை இலா வாழ்வு

கடவுள் வாழ்த்தில் கான்காவது குறளில் இறைவனே வேண்டுதல் வேண்டாமை இலான்’ என்று கூறுகிருர், திருவள்ளுவர். .

வேண்டுதல்வேண் டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல.

இறைவன் விருப்பு வெறுப்பு இல்லாதவன் என்று சொல்வதில் என்ன சிறப்பு இருக்கிறது? மனிதன் மெய்யறிவுடையவனுகும்போது விருப்பு வெறுப்பு அற்றவ கிைருன். பிறகு அவனுக்குப் பிறவியை அடையாத கிலேமை உண்டாகும். . .

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை; மற்றது வேண்டாமை வேண்ட வரும் (362)

என்று வேண்டாமையைப் பற்றிச் சொல்லுவார் வள்ளுவர். இறைவன் எதையும் வேண்டுகிறவன் அல்லன், எதையும் வேண்டாதவன் அல்லன் என்று கூற வேண்டிய அவசியம் என்ன?

இறைவனைத் தொழப் புகுகிறவர்களுக்கு, இதுகாறும் அவன் அருளேப் பெருமல் இருக்கிருேமே! நாம் அவனடியார் கூட்டத்தில் சேராமல் புறம்பே விற்கிருேமே! நம்மை அவன் வேண்டாதவகைக் கருதுவானே?’ என்ற ஐயம் உண்டானல் அதை மாற்றுவதற்கு இந்தக் குறளேச் சொன்னர். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/46&oldid=553257" இலிருந்து மீள்விக்கப்பட்டது