பக்கம்:கற்பக மலர்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'42 கற்பக மலர்

இறைவனும் அவ்வாறே இருக்கிருன். தன் அருகில் வந்தவனே, "நீ வேண்டாதவன்’ என்று ஒதுக்கித் தள்ள மாட்டான். அவனுக்கு வேண்டாதவர் இல்லை; வேண்டிய வர் என்றும் தனியே சிலர் இல்லே. நம்முடைய முயற்சியைக் கொண்டு அவனுடைய அருளேப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எந்தக் காலத்திலும் எந்த இடத்திலும் அவனே அணுக வழி உண்டு.

கதிரவன் வானில் நின்று கதிரை வீசுகிருன். அவனுக்கு யாரிடமும் விருப்பு இல்லை; யாரிடமும் வெறுப்பும் இல்லே. ஆயினும் கதிரவன்முன் தாமரைகள் மலர்கின்றன; குவளைகள் குவிகின்றன. மனிதன் பணியால் உண்டாகும் துன்பம் தீர்கிருன்; எலும்பு இல்லாத புழுச் செத்துப்போகிறது. சுடரோனுடைய கதிர், ஒன்றுக்குத் தனி வெம்மையாகவும் ஒன்றுக்குச் சற்றே குறைவாகவும் வீசுவதில்லை. ஆனாலும் அந்த அந்தப் பொருளின் தன்மைக்கு ஏற்ப விளேவு உண்டாகிறது.

இறைவனுடைய திருவருளும் அத்தகையதே. யார் யார் அவனே அணுகி அவனுடைய அடியைச் சேர்கிருர் களோ, தியானிக்கிருர்களோ, அவர்களுக்கு இடும்பை இல்லாமற் போய்விடும். -

அடிசேராதாருக்கு இடும்பைகள் உளவாகலும், அடி சேர்ந்தாருக்கு இடும்பைகள் இலவாகலும் உண்டாகும். இரண்டு பேருக்கும் பொதுவாக அவன் இருப்பினும் அடி சேரும் முயற்சி இல்லாதவன் இறைவனுல் அடையும் பயனைப் பெறமாட்டான். அடிசேர்ந்தவனே அந்தப் பயனேப் பெற்று இன்புறுவான்; இம்மையில் வரும் இடும் பைகளையும் மறுமையில் வரும் இடும்பைகளேயும் இல்லாமற் செய்துகொள்வான். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/51&oldid=553262" இலிருந்து மீள்விக்கப்பட்டது