பக்கம்:கற்பக மலர்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடும்பை இலா வாழ்வு 45

என்பது அவர் திருவாக்கு. நின்னுடைய திருவருள் துனேயால் நரகத்துக்குப் போனுலும் அதை விலக்க மாட்டேன்’ என்கிருர், விளக்கைக் கொடுத்தால் இருட் டில் போக அஞ்சமாட்டேன்; தெப்பம் இருந்தால் குளத் திற்கு அஞ்சமாட்டேன்’ என்று சொல்வதுபோல இருக் கிறது. அது. இறைவனுடைய அருள் இருந்தால் எந்த இடத்தில் இருந்தாலும் எந்தக் காலத்தில் இருந்தாலும் அங்கே அப்போது இன்பமே அடியவர்களுக்குக் கிடைக்கும்; துன்பம் அணுகாது. முத்தி கிடைக்கிறபோதுதான் அடி யார்கள் இன்பத்தை அடைவார்கள் என்ற வரையறை யில்லே. மறுமையில் அவர்களுக்கு இடும்பையில்லா இன்ப வாழ்வு எவ்வளவு உறுதியோ, அவ்வளவு உறுதி இம்மை வாழ்வும் இன்ப வாழ்வாகும் என்பது. நரகம் புகுந்தாலும் அவர்களின் அளவில் அங்கேயும் இடர் இராது; இன்பமே உஇ10.

இவற்றையெல்லாம் கினேவு கூரும் வண்ணம், 'யாண்டும் இடும்பை இல’ என்ருர் வள்ளுவர்.

வேண்டுதல்வேண் டாமை.

இலான் அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/54&oldid=553265" இலிருந்து மீள்விக்கப்பட்டது