பக்கம்:கற்பக மலர்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் சேர் புகழ் 5「学

இறைவன். அவனே தனிநாயகனாக கின்று எல்லா வற்றையும் இயக்குகிருன். பெரிய கோயிலே ஒரு பெரு வள்ளல் கட்டுகிரு.ர். அற்புதமான சிற்ப வேலைப் பாடுகளுடன் அங்தத் திருக்கோயில் அமைகிறது. அப்படி அமைத்த சிற்பியை யாவரும் பாராட்டுவார்கள். ஆயினும் அந்தச் சிற்பி கூவி வாங்கி வேலை செய்தவன். அவன் பெறும் புகழைவிட ஆலயத்தைக் கட்டுவித்த வள்ளலுக்கே மிகுதியான புகழ் சாரும். அந்தக் கோயிலே யார் சுட்டிப் பேசினலும், அந்த வள்ளல் கட்டிய கோயில் என்று சொல்வாரே யன்றி, சிற்பி கட்டியது என்று கூறமாட்டார். உண்மையில் சிற்பி ஒருவன் மாத்திரம் தனி நின்று அந்தக் கோயிலைக் கட்ட முடியாது. பல பல துனேவர்களேயும், தொழி லாளர்களேயும் வைத்துக்கொண்டு கட்டியிருப்பான். அந்த ஆலயம் கிறைவேறும்படி செய்த செயலில் ஒவ்வொரு வருக்கும் பங்கு உண்டு. யாருக்கும் தனியே புகழ் இல்லை. ஆனால் வேறு யாருக்கும் பங்கு போடாத புகழ், கட்டுவித்த வள்ளலுக்குக் கிடைக்கிறது. வேலை செய்தவர்களுடைய நிக்னவு எளிதில் மறந்து போகும். வள்ளல் வினேவு என்றும் இருக்கும். இதுவே இயல்பு; இதுவே முறை. -

அவ்வண்ணமே பல பல செயல்களால் புகழ் பெறுகிறவர்களுக்கு அப்புகழைப் பெறும் உரிமை சிறி தளவே உண்டு. அவனன்றி ஓரணுவும் அசையாது என்பது உண்மையானுல், எல்லாவற்றையும் செய்விக்கும் இறைவனுக்கே பங்கு போடாப் புகழ் சார வேண் டும். அதுதான் உண்மையான புகழ், பொருள் சேர் புகழி. -

இறைவன் ஒருவனே புகழத் தக்கவன் என்னும் கருத்தை அப்பர் சுவாமிகள், :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/62&oldid=553274" இலிருந்து மீள்விக்கப்பட்டது