பக்கம்:கற்பக மலர்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொய் தீர் நெறி 5 9 வாழவேண்டும். கண்ணேப் பாராமல் மூடிக் கொள்ள வேண்டும் என்பது அன்று. கண்ணுல் பார்ப்பனவற்றில் இறைவனுடைய எண்ணம் உண்டாக வேண்டும். ஐம் பொறிகளையும் செயற்படாமல் ஒழிப்பது என்பது இயலாத காரியம். அவற்றை மடை மாற்றி இறைவனேடு தொடர்புடைய பொருள்களின் நுகர்ச்சியிலே ஈடுபடுத்த வேண்டும்; அல்லது நுகர்ச்சிப் பொருளில் இறை வனுடைய உணர்வு உண்டாகும்படி அமைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த காட்டில் கடவுள் வழிபாட்டில் ஐம்பொறி களுக்கும் வேண்டிய நுகர்ச்சிகளே வைத்திருக்கிருர்கள். கண்ணினால் பார்க்க ஆண்டவனுக்குப் பல வடிவங் களையும் பல கோயில்களேயும் அமைத்து, பல அலங் காரங்களேச் செய்து, விழாவும் உலாவும் நடத்திப் பார்வையைத் தெய்வ உணர்வுடையதாகச் செய்தார்கள். இறைவனுடைய புகழை இசை கலந்து பாடி, அவன் விளையாடலைச் சொற்சுவை பொருட்சுவை பொருந்த அமைத்து, அவற்றைக் கேட்கச் செய்து செவி நுகர்ச்சியில் இறைவனுணர்வைப் புகுத்தினர்கள். மண மலர் மாலேகளே இறைவனுக்கு அணிந்து, துாபம் காட்டி மூக்குக்கு இறையுணர்வோடு மணம் நுகரும் வாய்ப்பை அமைத்திருக்கிருர்கள். இறைவனது அபிடேகச் சந்தனம் பூசி, திருக்கோயில் நந்தவனக் காற்று அடிக்க, திர்த்த ரோடி உடம்பில் இனிமை பரவப் பரிச நுகர்ச்சியிலே இறைவன் எண்ணத்தை ஏற்றினர்கள். இறைவனுக்கு நிவேதனமாக உணவு வகைகளேச் செய்து அவன் நினைவோடு அவற்றைப் பிரசாதமாக உண்ணச் செய் தார்கள். கொழுக்கட்டை என்ருல் விநாயகரையும், பஞ்சாமிர்தம் தினே மா என்ருல் முருகனையும், களி பிட்டு என்ருல் சிவபெருமானையும், புளியோரை என்ருல் திருமாலேயும் கினேக்க வைத்து மனிதனே மிகுதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/68&oldid=553280" இலிருந்து மீள்விக்கப்பட்டது