பக்கம்:கற்பக மலர்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8.4 கற்பக மலர்

வரைக்கும் நாம் எந்த கிலேயிலும் நிலைத்து வாழ முடியாது; பிறந்தும் இறந்தும் மாறி மாறி ஊசலைப் போலத் திரிவதாகவே நம் வாழ்வு இருக்கும். பொய் திரத் திர அந்த நெறியின் பயன் நம்மை அணுகிவரும். பொய் தீர்ந்தால் அவாத் தீரும்; பிறப்புத் திரும்; இறப்புத் திரும்; மாற்ற மின்றித் தோற்றமின்றி இன்மை யின்றி என்றும் ஒரு படித்தாக நீடு வாழும் வாழ்வு கிடைக்கும். இதனே எண்ணியே, நீடு வாழ்வார்’ என்ருர்.

நாம் இப்போது வாழவில்லை. நிலையில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிருேம். பொய்ந் நெறியில் ஒடும் இந்த ஓட்டத்தை மாற்றிப் பொய்தீர் ஒழுக்க நெறியில் செல்லவேண்டும்; அதற்குரிய லட்சியத்தை அறிந்து அதனே நோக்கிச் செல்ல வேண்டும்.

நெறியில் சென்ருர் என்று சொல்லாமல் கின்ருர் என்பது பொருந்துமா என்ற கேள்வி எழலாம். இங்கே கிற்றலாவது, ஒன்றையே தொடர்ந்து செய்வதைக் குறிப்பது. வெவ்வேறு நெறியில் அடிக்கடி நடையை மாற்ருமல், ஒரே நெறியில் இடையீடு இன்றிச் செல்வதையே நெறி நிற்றல் என்று குறித்தார்.

இடைவிடாது பொய்தீர் ஒழுக்க நெறியிலே ஐந்தவித்தானே லட்சியமாகக் கொண்டு உலகில் வாழ் பவர் என்றும் மாருத நீண்ட வாழ்க்கையாகிய முத்தியை எய்துவர் என்பதே இக்குறளின் பொருள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/73&oldid=553285" இலிருந்து மீள்விக்கப்பட்டது