பக்கம்:கற்பக மலர்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமை இல்லான் 72

உண்டாகாது. குறைவிலா நிறைவான பரம்பொருளே உள்ளத்தில் வைத்தவருக்கு உண்டாகும்.

இறைவனுடைய அடியார்களின் இயல்பைச் சொல்ல வந்த சேக்கிழார் இந்த நிறைந்த வாழ்வைக் காட்டு கிருர்,

'கேடும் ஆக்கமும் கெட்ட திருவினர்

ஒடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார் கூடும் அன்பினில் கும்பிட லேயன்றி வீடும் வேண்டா விறலின் விளங்கினர்.”

அவர்களுடைய திருவுக்குக் கேடு இல்லை; ஆக்கம் இல்லை. போக்கில்லே; வரவில்லை. உலகத்தார் செல்வம் என்று போற்றும் பொன்னேயும், பயனற்றதென்று கருதும் ஒட்டையும் ஒரு கிலேயில் வைத்துப் பார்ப்பார்கள். 'பொன்னும் ஒடும்’ என்ற முறையில் சொன்னல் ஒட்டையும் மதிப்புடையதாகப் பாதுகாப்பார்களோ என்ற ஐயம் உண்டாகலாம். ஆதலின் ஒட்டை மதிக்காதது போலப் பொன்னேயும் புறக்கணிப்பார் என்பதை உணர்த்த, ஒடும் செம்பொனும்’ என்று ஒட்டை முன்னே வைத்தார். இப்படி இருப்பதற்கு அவர்கள்பால் கூடிய அன்பே காரணம். - - - --

இறைவன் திருவடித் தியானம் உடையவர்கள், "எல்லாம் உன் உடைமையே, எல்லாம் உன் அடிமையே, எல்லாம் உன்னுடைய செயலே’ என்ற உணர்வுடன் இருப்பார்கள். அதல்ை யாவுமே இறைவனுடைய கொடை என்ற எண்ணம் மிகும். அது காரணமாக,

'நன்றே செய்வாய் பிழைசெய்வாய் கானே இதற்கு நாயகனே' -

கற்பக-ே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/82&oldid=553295" இலிருந்து மீள்விக்கப்பட்டது