பக்கம்:கற்பக மலர்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறவிப் பெருங்கடல் 89.

வீழ்நாள் படா.அமை நன்ருற்றின் அஃதொருவன்

வாழ்நாள் வழி அடைக்கும் கல்.’ (38) மற்றும் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்க லுற்ருர்க் குடம்பும் மிகை (345)

என்னும் இடத்திலும் பிறப்புறுத்தலேப் பற்றிய செய்தி வருகிறது.

இத்தனே குறளாலும் பிறப்பை அறுப்பதே உயிரின் முடிந்த முடிபாகிய லட்சியம் என்ற கருத்தை உணரலாம். அதனே அறுக்க அவாவையும் பற்றையும் சார்பையும் ஒழிக்கவேண்டும். பற்று அற்ற கண்ணே பிறப்பறுக்கும்" என்ற குறளில் அது தெளிவாக இருக்கிறது. அற்றது பற்றெனில் உற்றது வீடு' என்று நம்மாழ்வாரும் இதையே சொல்கிரு.ர்.

பிறவாமை வேண்டுமானுல் பற்று அறவேண்டும் என்பதை உணர்ந்தோம். அந்தப் பற்றை அறுப்பது எப்படி? அதற்கும் வழி சொல்கிரும் திருவள்ளுவர்.

சேற்றிலே அழுந்தினவன் ஒருவன் தன் முயற்சியினலே சேற்றினின்றும் மீள முடியாது. ஒரு கால் புதைய, அதனே மேலே எடுக்க மற்ருெரு கால அழுத்தினுல்

1. செய்யாது கழியும் நாள் உளவாகாமல் ஒருவன் அறத்தைச் செய்யுமாயின், அச்செயல் அவன் யாக்கையோடு கூடும் காள் வரும் வழியை வாராமல் அடைக்கும் கல்லாம்’ என்பது பரிமேலழகர் உரை.

2. பிறப்பறுத்தலே மேற்கொண்டாருக்கு அதற்குக் கருவி யாகிய உடம்பும் மிகையாம்; ஆனபின் அதற்கு மேலே இயைபில்லனவும் சில தொடர்ப்பாடு உளவாதல் என்னும்?பரிமேலழகர் உரை. *.

கற்பக-?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/98&oldid=553312" இலிருந்து மீள்விக்கப்பட்டது