பக்கம்:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

கற்பனைச்சித்திரம்



திட்டம் தத்துவம் சகலமும் வேறு வேறாகத்தான் இருக்கும் என்பதை அறிந்தாள். அன்றிரவு அவளையும் அறியாமல் கண்ணீரும் சிந்தியது, அந்த அளவு உருக்கம் காரணமில்லாமல் பிறக்கவில்லை; சிங்காரத்திடம் தேவாவுக்குக் காதல் அதற்கு முன்பே பிறந்து தவழ்ந்து கொண்டிருந்தது! கலெக்டர் வீட்டிலே வாழ வேண்டிய நாய்க்குட்டியை கடன் சுமை ஏறிக்கிடக்கும் வீட்டிலே கொண்டு வரச், சிங்காரம் முயற்சித்தான், மாளிகையிலே வாழ வழி வகுத்துக்கொண்டிருந்தார் சுகானந்தம் தன் மகளுக்கு, அவள் அந்த மண்சுவர் வீட்டிலே தன் 'மனோஹரன்' இருக்கக் கண்டாள்! நாயைக் கொண்டே, 'இலாபம்' பெறும் எண்ணங் கொண்டவரின் மகளுக்குக் "காதல்" பூத்துப் பயன் என்ன? கருகும், அல்லது அவர் கசக்கி வீசி எறிவார் கோபத்தோடு!

"அடுத்த தடவை" வந்தது, சிங்காரத்தின் சார்பிலே தேவா, மனு போட்டாள். இம்முறை தாயார் அதை நிராகரித்தாள், கடுமையான பேச்சுடன்.

"ரொம்ப இலட்சணந்தான்! அதுக பாவம், ஏழைக. அதுக வீட்டிலே நாயைக் கொடுத்தா, என்ன ஆகும், பாலும் பிஸ்கட்டும், வாங்கப் பணம் ஏது? நாய் நாலு நாளிலே சாகும், என்றாள் தேவியின் தாயார். உண்மைதான், ஆனால் உள்ளத்தைக் குமுறச் செய்யும் உண்மை. பாழாய்ப்போன ஜூலியா கர்ப்பமாகாலிருக்கக் கூடாதா, குட்டியும் பிறந்து, அவருக்குக்கொடுக்க முடியாது என்றும் சொன்னால், அவர் எவ்வளவு வேதனைப்படுவார் பாவம், என்று குழம்பிக் கொண்டிருந்தாள், தேவா. 'அவர், அதாவது சிங்காரம், அடுத்த வீட்டு அன்னத்துக்கும் தனக்கும் மார்கழி போனதும் கலியாணம் என்ற ஆசையிலே இருந்தான். நாய்க்குட்டி ஆசையும் விடவில்லை. மறுபடியும் செட்டியார் வீட்டுக்கு நடந்தபடிதான் இருந்தான். ஊரிலே எந்த ஆபீசரும் இணங்கவில்லை, நாய்க்