பக்கம்:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

கற்பனைச்சித்திரம்



புன்னகை பூத்த முகத்தோடு நின்றான்! பித்தம் தெளியும் நிலை பிறந்தது தேவாவுக்கு.

"ஜார்ஜ்" சிங்காரத்தின் சினிமா, காபி, சீட்டாட்டம் முதலிய பல வழக்கங்களைப் போக்கிவிட்டான். கையில் கிடைக்கும் 'காசு', பிஸ்கட்டாகப் பாலாகச், சோப்பாக, மாறும்போது, சீட்டாட்டமும் சினிமாவும் ஏது? அன்னத்துக்கு அன்புடன் என்றேனும் ஓர் நாள் வாங்கித்தரும் கனகாம்பரம்கூட, பிஸ்கட்டாகிவிட்டது! 'ஜார்ஜ்' நன்றாக வளரவேண்டும் என்பதிலே அவன் அவ்வளவு அக்கரை காட்டினான் செலவைப் பொருட்படுத்தாமல், ஆனால் 'ஜார்ஜ்' இந்த ஏழை வீட்டுக்கு ஏற்றதா, திருப்தியோடு வளர மெலிந்தான். உடலிலே சொறி கண்டது, ஓயாது அழுவான். 'ஜார்ஜ்' வரவர அவலட்சணமாகவும் ஆகி வந்தான். சிங்காரம், இந்த நாய் குட்டிக்காகப் பணத்தைப் பாழாக்குவது, அன்னத்துக்குப் பிடிக்கவில்லை. "அதன் வயிறு என்ன வயிறோ, ஒரு நாளைக்கு நாலணா பிஸ்கட்டைத் தின்றுவிடுகிறதே. இவ்வளவு தின்றும், எலும்பும் நோலுந்தான் மிச்சமாக இருக்கிறது" என்று ஏசுவாள் அன்னம். இந்த வீண் செலவை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று முயற்சி செய்தாள்.

"சோறு போடலாமே ஜார்ஜுக்கு" என்று யோசனை கூறினாள். செலவைக் குறைக்க, "செச்சே! ஒரு ஆறுமாத காலம், பாலும் பிஸ்கட்டுந்தான் தரவேண்டும். தேவா அதை வற்புறுத்தி வற்புறுத்திக் கூறினாளே தெரியுமா?" என்றான் சிங்காரம். "பொழுது சாயும்போது அந்த நாய்க் குட்டியைக் குளிப்பாட்டுவானேன்" என்று கேட்பாள் அன்னம், "இது தேவாவின் யோசனை" என்பான் சிங்காரம். கைதவறி நாய்க்குட்டியைக் கீழே போட்டு விட்டாலோ, அன்னத்தைக் கண்டிப்பான்! அந்தக் கண்டனம்கூட அவளுக்கு அவ்வளவு கஷ்டமாக இல்லை, இடையிடையே தேவா, தேவா, என்று பேசியதுதான் கஷ்டத்தைத் தந்தது. தேவாமீது அன்னத்துக்கு அசூயையே பிறந்தது. தேவாவையே கொண்டு வந்து வளர்ப்பது