பக்கம்:கற்பலங்காரம்.pdf/1

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கற்பலங்காரம்


1

காலையில் ஏழரை மணி இருக்கும். அரமனைத தோடடத்தினின்றும் புஷ்ப வாஸனை கமவென்று பந்துகொண்டிருந்தது. கிளிகள் கொஞ்சிக் குலாவியிருந்தன. கன்றுக் குட்டிகள் துள்ளியோடின. மான் கூட்டங்கள் மிரண்டு மிரண்டு மிரண்டு தாவிப் பாய்ந்து கொண்டிருந்தன. எதிரில் நரிகரையில் கொக்குகளும், நாரைகளும் மீன்களைக் கொத்தித் தின்று கொண்டிருந்தன. எரியின் மீது பருந்துகள் வட்டமிட்டுக் கொண்டிந்தன கொக்குகளும் நாரைகளும் தின்ற மிகுதியைக் காகங்கள் கூட்டங்கூடி , உனக்கோ எனக்கோ என ஒன்டொன்று சண்டையிட்டு, இங்கும் அங்கும் குதித்துப் பொறுக்கிக்கொண்டிருந்தன. கத்தரி முதலான கிழ்ப் பயிரிடுகிற இடங்களில், பள்ளரும் பண்ணையாள்களும் "பிளையாரே வாரீர்" என்றொரு தூவினிடத்தும், "மூங்கி விலை மேலே தூங்கு பனிநீராம" என ஒரு குளத்தினிடத்தும், "பாலடையுஞ் சங்கும் பாலன் பெறக் கண்டேன், தொட்டிலிலே குழநதை தூங்க கனாக் கண்டேன்" என வரி காலினிடத்தும், அங்கங்கே ஏற்றப்பாட்டு பாடிக்கொண்டே தண்ணீர் இறைத்திருந்தனர். அரமனை மதிற்சுவர் வாயிலின் ஸமீபத்திலே, ஒரு பங்களாவில், பொக்கிஷசாலை உத்தியோகஸ்தர்கள், கிஸ்தி வசூல் சேவகர் சிப்பந்தி செலவு முதலான கணக்குகளை எழுதிக்கொண்டிருந்தனர் வாயில்காவலர் வாள் உருவி உலாவிக் கொண்டிருந்தனர்

ரமனையின் மேன்மாடியிலே, பஞ்சணை தைத்த சாய்வு தாற்காலி ஒன்று, பலகணியின் பக்கலில் போட்டிருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பலங்காரம்.pdf/1&oldid=1257210" இலிருந்து மீள்விக்கப்பட்டது