தென்தமிழ் தெய்வப் பரணி
19
முடிந்ததும் காஞ்சியிலுள்ள மாளிகை ஒன்றில் செய்தமைத்த சித்திர மண்டபத்தில் முத்துப்பந்தரின் கீழ் தேவியர், அமைச்சர், தானைத் தலைவர் முதலியோர் புடைசூழ வீற்றிருக்கும் பொழுது சிற்றரசர் பலர் வந்து அவனைத் திறையுடன் காண்கின்றனர். கலிங்க நாட்டரசன் அனந்தபன்மன் மட்டிலும் வந்து காணவில்லை. அதைக் கண்ட குலோத்துங்கன் தன் தானைத் தலைவனான கருணாகரத் தொண்டைமானை தண்டெடுத்துச் சென்று கலிங்க அரசனின் செருக்கை அடக்கி வருமாறு ஏவுகின்றனன். அது கேட்ட கலிங்க வேந்தன் 'வெந்தறுகண் வெகுளியினால் வெய்துயிர்த்துக் கைபுடைத்து வியர்த்து நோக்கி' ,
வண்டினுக்கும் திசையான மதங்கொடுக்கும்
மலர்க்கவிகை அபயற் கன்றித்
தண்டினுக்கும் எளியனோ எனவெகுண்டு
தடம்புயங்கள் குலுங்க நக்கே[1]
கானரணும் மலையானும் கடலரணும்
சூழ்கிடந்த கலிங்கர் பூமி
தானரண முடைத்தென்று கருதாது
வருவதுமத் தண்டு போலும்.[2]
[கவிகை - வெண்கொற்றக்குடை ; தண்டு - சேனை நக்கு - சிரித்து ; கான்-காடு,]
என்று கூறி போர் தொடங்குகிறான் ; போர் கடுமையாக நடைபெறுகின்றது; இறுதியில் கலிங்க வேந்தன் தோற்றோடுகின்றன். கருணாகரன் கலிங்கத்தை எரிகொளுவி அழித்துப் பல்வகைச் செல்வங்