பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

கலிங்கத்துப் பரணி ஆராய்ச்சி


கங்கள், மண்டையோடுகள் ஆகியவை உண்கலன்களாகவும், மன்னர்களின் கேடகங்கள் பொற்பாத்திரங்களாகவும் , அவர்களின் வெண்கொற்றக் குடைகள் வெள்ளிப் பாத்திரங்களாகவும், யானைச் செவிகள் பரிமாறும் பாத்திரங்களாகவும், வேல் பாய்ந்த வீரர்களின் தலைகள் அகப்பைகளாகவும் பயன்படுகின்றன. தேவியருளால் உயர் பதவி பெறுவோரின் விழிக்கனல் பகல் விளக்காகவும் நிணம் பாவாடையாகவும் கொள்ளப்படுகின்றன. பார்ப்பனப் பேய்கள், சமணப் பேய்கள், புத்தப் பேய்கள், பார்வைப் பேய்கள், குருட்டுப் பேய்கள், ஊமைப் பேய்கள், செவிட்டுப் பேய்கள், சூற்பேய் கன், மூடப் பேய்கள், நோக்கப் பேய்கள், கூத்திப் பேய்கள், கனவுகண்ட பேய்கள், கணக்கப் பேய்கள் ஆகிய பேய்களுக்கு அவையவை தகுதிக் கேற்றவாறு கூழ் வார்க்கப்பெறுகின்றது. கூழுண்ட பின் குதிரைகளின் காதுகளாகிய வெற்றிலையும் அவைகளின் கணைக்கால் பிளவுகளாகிய பாக்கையும் கலிங்க வீரர்களின் கண்களிலுள்ள வெண்மணியாகிய சுண்ணாம்பையும் கலந்து தாம்பூலம் தரித்துக் கொள்ளுகின்றன. தாம்பூலத்தை அதிகம் தின்று புரையேறின பேய்கள் பூதத்தின் தலையிலுள்ள மயிரை மோந்து பார்க்கின்றன.

உண்டகளிப்பு

நீண்ட நாட்கள் பசியால் வாடிக்கிடந்த பேய்கள் உண்டு வயிறு நிரம்பியதும் மகிழ்ச்சியால் மலைகள் கூத்தாடுவனபோல் கூத்தாடுகின்றன. சில பேய்கள் ஆடைகளை மேலே வீசிப் பாடி விளையாடு-