உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலிங்க ராணி, அண்ணாதுரை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

கலிங்க

வீரமணி, களம்புகுந்தது முதல் நீ விம்முறாத விநாடி உண்டா?

"என்னை மன்னிக்க வேண்டும், தேவி! நான் கலங்குவது உண்மையே! அந்த வீரனுக்கேற்றவளல்ல நான்! கோழைத்தனம் என் உள்ளத்திலே கூத்தாடுகின்றது."

"இயற்கைதான் தோழி! எனினும் அஞ்சாதே! வீரமணி வெற்றி மாலையுடன் வருவான். உனக்கு மாலையிடுவான். நம் படைபலம் நீ அறியாததோ? இதே நேரத்தில் கலிங்கத்தில் நடக்கும் கடும் போரிலே எதிரிகள் தோற்று ஓடுவர், நமது படை முன், எந்த மன்னனின் படை நிற்க முடியும்?"

அரண்மனையிலே இந்தப் பேச்சு! காஞ்சியிலே மன்னன், கோபங்குறையாது வீற்றிருந்தான். களத்திலே கடும்போர் நடந்து கொண்டிருந்தது.

இருநாட்டுப் படைகளும் கடலைக் கடல் எதிர்ப்பது போல், ஒன்றை ஒன்று எதிர்த்தன. உக்கிரமான போர்! உருண்டன தலைகள்! மிரண்டன கரிகள்! பதைத்தன பரிகள்! பாரகம் செங்குருதி மயமாயிற்று! பகல் இரவு போலாயிற்று. பட்டினமும் புறமும் காட்டொலி! பயங்கரமான போர் நடந்தது.

கடலிலே அலைகள் பாய்ந்து வருவதுபோல், குதிரைப் படைகள் ஒன்றின்மீதொன்று, நுரை கொழிக்கும் வாயுடன் பாய்ந்தன. மலைகளை மலைகள் தாக்குவது போலிருந்தது, மதங்கொண்ட யானைகள் ஒன்றை ஒன்று தாக்குவது, தேர்களைத் தேர்கள் தாக்கின, மேகங்கள் ஒன்றோடொன்று மோதுவது போல், மின்னல் ஒளிபோல் வாள்வீச்சும், வேல் வீச்சும்! புயற்காற்றிலே சிக்கிய மரங்கள் கீழே சாய்வது போல், வில்வீரர்கள் விடுகணைகள் வீரர்களை வீழ்த்தின. வெட்டி வீழ்த்தப்பட்ட யானைகளின் உடல்களைக் கரையாகக் கொண்டு, வீழ்ந்துபோன வீரர்களின் குருதி ஆறென ஓட, அதிலே புதுவெள்ளம் அடித்துவரும் பல பொருள்போல்