பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 4f or கூறுகின்றனர். அதுதான் "ஏறு தழுவுதல்" என்னும் தேர்வு. கொம்புசீவி விடப்பட்டுக் கொழுகொழுவென்று வளர்ந்திருக்கும் இளங்காளை ஒன்ன்ற விரட்டிவிட்டு அதைப் பின் தொடர்ந்து பிடிக்கச் செய்தலே "ஏறுதழுவுதல்" என்பது.

எவனொருவன் தழுவுகிறானோ அவன் துணிவைப் பாராட்டி அவனுக்கு அக்கன்னியைப் பெருவிருப்புடன் திருமணம் செய்துகொடுப்பர் பெற்றோர். தலைவனுக்காகத் தலைவனுடைய நண்பன் இந்தத் தேர்வைப்பற்றி அறிந்துவந்து கூறுகிறான். "இவள் ஒப்பற்ற புகழினையுடைய நல்ல காளையைத் தழுவுவாரவற்கே, அழகான மாந்தளிர் போன்ற மேனியைக் கொடுப்பர்.இவளுடைய பருவத்திலேயே செய்யப்பட்ட முடிவு இது. என்று கூறினான் நண்பன். அதுகேட்ட தலைவன், அச்சுற்றத்தைநோக்கி, "யான் காளையைத் தழுவி அவளைக் கொள்வேன் என்று அவள் பெற்றோருக்குச் சொல்லுவாயாக என்றான் நண்பன்.

"ஒ ஒ இவள் பொருபுகழ்

நல்லேறு கொள்பவரல்லாற் திருமா மெய் தீண்டலர்

என்று கருமமா எல்லாருங் கேட்ப

அறைந்தறைந் தெப்பொழுதுஞ் சொல்லால் தரப்பட்டவள்”

பெண்ணின் தாய் தலைவன் - "சொல்லுக, பாணியே

மென்றோர் அறைகென்றார் பாரித்தார் மாணிழை யாறாகச் சாறு”

(கலித்தொகை : முல்லை) (ஏறு காளை, கருமம்-செயல், அறைந்து-பறைசாற்றி, பாணியேம் - காலந் தாழ்க்கமாட்டோம், சாறு ஏறுவிடுவிழா, பாரித்தார் - பலபல பேசுமிளைஞர்).

இதனுள் வீரத்தை அறிந்து மகளைக் கொடுக்க வேண்டுமென்ற பெற்றோரது சீரிய நோக்கமும், வீரத்தை கான