114
மா. இராசமாணிக்கனார்
-உரையான். படர்-துன்பம். கழிதல்-இறத்தல். ஏனல்-தினைப்புனம். ஒரு ஞான்று-ஒரு நாள். ஊக்கி-ஆட்டு. நெகிழ்வு-நழுவி. வாயாச் செத்து-உண்மையாகக் கருதி. ஒய்யென-விரைவாக. ஏற்று-மயக்கம் தெளிந்து. அங்கண்-நாகரிகம்.
2. திறன் உண்டேல் உரை!
குறிஞ்சி நிலத்துக் குறவர் குலத்தில் பிறந்த ஒரு பெண்ணைக் காட்டு நாட்டு மகன் ஒருவன் காதலித்தான். அவர் காதலை அப்பெண்ணின் பெற்றோர் அறியார். அதனால், அவன் அவர்கள் அறியாதபடி ஒவ்வொரு நாளும் இரவில் சென்று வந்தான். ஒருநாள் காணாதிருப்பதும் அவளுக்கு முடியாததாயிற்று. காணாதபோது கலங்குவதும், காண நேர்ந்ததும் களிப்பதும் அவள் இயல்பாயிற்று. அவர் காதற் சிறப்பைக் கண்ட தோழி, அவன் இரவில் வருவதும் கூடாது; அவன் வாராமையால் அவள் வருந்துவதும் கூடாது. இதற்குத் திருமணமே வழி என உணர்ந்தாள்; ஒருநாள் அவனைக் கண்டு தன் கருத்தைத் தெரிவித்தாள். அவனும் அதற்கு இசைந்தான். மகிழ்ச்சிக்குரிய அச்செய்தியைத் தோழி அப்பெண்ணுக்கு அறிவித்தது இது;
"இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன்
உமை அமர்ந்து உயர்மலை இருந்தனனாக,
ஐயிரு தலையின் அரக்கர் கோமான்,
தொடிப்பொலி தடக்கையின் கீழ்புகுத்து அம்மலை
எடுக்கல் செல்லாது உழப்பவன் போல
5
உறுபுலி உருவேய்ப்பப் பூத்த வேங்கையைக்
கறுவுகொண்டு அதன்முதல் குத்திய மதயானை,
நீடிரு விடரகம் சிலம்பக் கூய்த் தன்
கோடு புய்க்கல்லாது உழக்கும் நாட! கேள்:
ஆரிடை என்னாய் நீ, அரவு அஞ்சாய் வந்தக்கால்
10
நீர் அற்ற புலமேபோல் புல்லென்றாள், வைகறை
கார்பெற்ற புலமேபோல் கவின்பெறும்; அக்கவின்
தீராமல் காப்பதோர் திறன் உண்டேல் உரைத்தைக்காண்;
இருளிடை என்னாய் நீ, இரவு அஞ்சாய் வந்தக்கால்,
பொருள் இல்லான் இளமைபோல் புல்லென்றாள், வைகறை
15