உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலித்தொகை 2011.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

மா. இராசமாணிக்கனார்


முருகவேளை வணங்கி வழிபட்டுக் குரவைக் கூத்தாடுவோம்; வருக! வந்து, கொண்டு நிலைச்செய்யுளை முதலில் நீ பாடு!

நான் நம் காதலனை மணக்கும் நல்ல நாள் வரும் வரையும், தம் குடியில் பிறந்த ஒருத்திக்குத் தகுதி உடையவன் ஒருவனைத் தேர்ந்து மண முடிப்பது தம் கடமையாகவும், அதைத் தாம் செய்யாது விட்டதோடு, தனக்கேற்ற ஒருவனைத் தானே தேடிக்கொண்ட அவள் செயலுக்கும் தடை செய்த தம் செயலால் வந்த மானக்கேட்டைத் தாங்கி வாழ நம் சுற்றத்தார் முற்பிறவியில் என்ன தவம் செய்தார்களோ?

பலர் அறியத் திருமணம் நடைபெற்று விடுமாதலின், நம் தினைப்புனத்தில் நிற்கும் வேங்கை மரத்தின் பொன் போன்ற மகரந்தப் பொடிகள் உதிர்ந்து கிடக்கும் பாறைகளைக்கொண்ட நம் மனையின் முன்னிடத்திலும், காதலனோடு கூடி, பலர் அறிய மகிழும் வாய்ப்பு இனிக்கிடைக்கும் அல்லவோ?

காதலரைப் பிரிவின்றிப் பெற்று மகிழும் வாய்ப்பினைப் பெற்று விட்டமையால், இனி நினைக்கும் போதெல்லாம் அவரோடு கூடிக் களிப்பேனாதலின், களவுக் காலத்தில், கனவில் மட்டுமே கூடிக் களிக்கும் நிலையினை இனிக் கை விடுவேன் அல்லவோ?

பெண்ணே! உம் திருமணத்தின்போது, உன் காதலனும் நீயும், இதற்கு முன் ஒருவரை ஒருவர் பார்த்தறியாதவர் போல் நடிப்பீர்களோ?

அவ்வாறு நீங்கள் நடிக்க, நானும் உங்கள் பழைய நட்பைப் பார்த்தறியாதவள் போல் மறைத்து விடுவேனோ?

மேகம் தவழும் உயர்ந்த மலைநாடன் மேற்கொள்ளும் அம் மணவிழாக் காட்சியைக் கண்டு களிப்பதற்கு மாறாக அதைக் காணாது. நாண மிகுதியால் கைகளால் மறைபட்டுப் போகும் கண்களும் கண்களாகுமோ?

அவ்வாறு மறைத்துக் கொள்வதால் வந்த கேடு என்ன? உன் கண்கள்தாம் உள்ளனவே! அம்மணக் கோலத்தை, உன் கண்களால் கண்டு களிப்பேன்.

நன்று; என் கண்கள் நெய்தல் மலர் நிகர்க்கும் உன் கண்களாக மாறும் பேறு பெறுமாக!

- என்று மாறிமாறிப் பாடி நாம் முருகனை வழிபடவே, நெறிமுறைகளை அறிந்தவனும், திருமணத்திற்கு ஏற்ற காலத்தைக் குறிக்க வல்லோனும் ஆகிய அறிவனை அடைந்து, தொகுத்தும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலித்தொகை_2011.pdf/121&oldid=1761962" இலிருந்து மீள்விக்கப்பட்டது