உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலித்தொகை 2011.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

மா. இராசமாணிக்கனார்


சேர்ந்தான். உன் தந்தையும், வேங்கை மரத்தடியில் அமர்ந்து இசைவு தந்தான். எல்லாம் நன்மையாகவே முடிந்தன!

சுளகு-முறம். அறை-பாறை. இருவாம்-குற்றுவாம். இரங்கிய-ஒலிக்கும். பணவை-பரண். வீ-மலர். இலங்கும்-விளங்கித் தோன்றும். ஈரம்-அருள். கயம்-குளம். மண்ணா-கழுவாத. துன்னான்-சேராது. இனையவை-இவை போன்றன. ஒன்றி-கலந்து. கிழவன்-உரிமை உடையவன். நயந்தனன்-இசைந்தனன்.

உள்ளுறை: தினை உண்ணவந்த யானை, தலைவியின் நலம் நுகர வந்த தலைவனாகவும் கவண் எறிந்த கானவன், கடுஞ் சொல் கூறியதாயாகவும், கல், வேங்கை மலர் முதலாயினவற்றைச் சிதைத்தல், தாய் கூறிய கடுஞ்சொல், ஆயத்தாரை அகற்றித் தோழியைத் துயர் செய்து, தலைவியின் உள்ளத்தில் கிடந்து வருந்தியதாகவும் கொள்க.

6. பசப்பு மாய்ந்தது!

ர் இளைஞன், தினைப்புனக் காவல் மேற்கொண்டிருந்த ஒரு கன்னியைக் கண்டு காதல் கொண்டான். அவளும் அவன் காதலை ஏற்றுக்கொண்டாள். சில நாட்கள் சென்றன. அவன் வருகை தடையுற்றது. அப்பெண் பெரிதும் வருந்தினாள். அப்பெண்ணின் துயர் கண்ட அவள் தோழி, ஒரு நாள் அவன் கொடுமைகளையெல்லாம் தொகுத்துப் பாக்களில் புனைந்து பாடினாள். காதலன் வாராது கொடுமை புரியினும், அவனைப் பிறர் பழிப்பதைப் பொறுக்க மாட்டாத அப்பெண், அவன் சிறப்புக்களையெல்லாம் தொகுத்துப் பாடத் தொடங்கினாள். அப்போது ஆங்கு வந்த அவன், தன் வருகையை அறிவிக்காதே என்று தோழிக்குக் கையாட்டி விட்டு, காதலியின் பின்புறமே வந்து தழுவிக் கொண்டான். அவ்வின்பத்தை அவள் தனக்குள்ளே சொல்லி மகிழ்ந்தது இது:

"மறங்கொள் இரும்புலித் தொன்முரண் தொலைத்த
முறஞ்செவி வாரணம் முன் குளகு அருந்திக்,
கறங்கு வெள்அருவி ஒலியின் துஞ்சும்
பிறங்கு இரும் சோலை நன்மலை நாடன்,
மறந்தான்; மறக்கு; இனி, எல்லா! நமக்குச் 5

சிறந்தன நாம் நற்கு அறிந்தனமாயின், அவன்திறம்
கொல்யானைக் கோட்டால் வெதிர்நெல் குறுவாம் நாம்
வள்ளை அகவுவம் வா; இகுளை! நாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலித்தொகை_2011.pdf/129&oldid=1764806" இலிருந்து மீள்விக்கப்பட்டது