134
மா. இராசமாணிக்கனார்
மூங்கில் விளங்கித் தோன்றல், தலைவன் வரைந்து கொள்ளவே, பசலை அகலத் தலைவி வனப்புற்றுத் தோன்றல்; யானை, பிடியோடு தழை உண்டு இனிது வாழ்தல், தலைவன், தலைவியை மணந்து இன்பம் நுகர்ந்து, இல்லறம் ஆற்றுவன் என்பதாம். வாழைக்குலை; புலியடிபோல் தோன்றல், பேரின்பம் தரவல்ல தலைவன், மணந்து கொள்ளாமையால் கொடியவன்போல் தோன்றுதல்.
8. அஞர் தீர்க்கும் மருந்து!
ஓர் இளைஞன் ஒரு பெண்ணைக் காதலித்தான். ஆனால், அவளை விரைவில் மணந்து கொள்ள விரும்பவில்லை. அதனால், அவளைப் பற்றிப் பலரும் பலவாறு கூறிப் பழிக்கத் தலைப்பட்டனர். அதனால் அவள் பெரிதும் வருந்தினாள்; ஆயினும், தன் வருத்தத்தைப் பிறர் அறியாதவாறு தனக்குள்ளே அடக்கிக் கொண்டாள். இவற்றை யெல்லாம் கண்ட தோழி, அவ்விளைஞனைக் கண்டு, விரைந்து வந்து மணம் செய்து கொள்ளுமாறு வேண்டிக்கொண்டாள். அது இது:
"கதிர்விரி கனைசுடர்க் கவின்கொண்ட நனஞ்சாரல்
எதிர் எதிர் ஓங்கிய மால்வரை அடுக்கத்து
அதிர்இசை அருவிதன் அஞ்சினை மிசைவீழ,
முதிர்இணர் ஊழ்கொண்ட முழவுத்தாள் எரிவேங்கை,
வரிநுதல் எழில் வேழம், பூ, நீர் மேல் சொரிதரப்
5
புரிநெகிழ் தாமரை மலரங்கண் வீறுஎய்தித்
திருநயந்து இருந்தன்ன தேங்கமழ் விறல் வெற்ப!
தன்எவ்வம் கூரினும், நீ செய்த அருளின்மை
என்னையும் மறைத்தாள் என்தோழி, அது கேட்டு
நின்னையான் பிறர் முன்னர்ப் பழிகூறல் தான்நாணி,
10
கூருநோய் சிறப்பவும், நீ செய்த அருளின்மை
சேரியும் மறைத்தாள் என்தோழி, அதுகேட்டு
ஒரும் நீ நிலையலை எனக்கூறல் தான்நாணி;
நோய்அட வருந்தியம், நீசெய்த அருளின்மை
ஆயமும் மறைத்தாள்என் தோழி அதுகேட்டு
15
மாயநின் பண்பின்மை பிறர்கூறல் தான்நாணி;
எனவாங்கு,