34
மா. இராசமாணிக்கனார்
தோன்றத் தீட்டப்பட்ட வேலை வலக்கையில் ஏந்தி, பொருள் ஈட்டும் வேட்கையால் போகத் துணிந்துள்ளாய் நீ என்பதை என் தோழி அறிந்து கொண்டாள்.
சிறிது நாழிகைக்கு முன், அவள் என்னிடம் வந்து, 'தோழி! நம் காதலர் முத்துமாலை ஒளி வீச, அதனோடு கலந்து அணியப்பெற்ற வகைவகையான ஆரங்கள் மேலே கிடந்து அசையும் என் இளம் கொங்கைகளை, இடையே சிறிது நாழிகையும் வீணாகாவாறு தழுவியும், தம் வேட்கை அடங்காதவராய், அக்கூட்டத்தால் கலைந்த என் தலைமயிரைச் செப்பம் செய்வர்; காதலர் காட்டும் இப்பேரன்பிற்குக் காரணம் யாதேனும் இருத்தல் வேண்டும்; அவர் கருதியுள்ள காரியம் யாதோ? அதை நான் அறியேன்' என்று கூறினாள்.
'முள்போல் கூரிய பற்களிடையே ஊறும் அமிழ்து போன்ற இனிமையுடைய உமிழ்நீரை உண்டு, அது தேனினும் தித்திக்கிறது எனப் பாராட்டியும் தன் வேட்கை அடங்காமல், கூட்டத்தால் கலைந்த என் அணிகளைச் செப்பம் செய்வர்; இப்பேரன்பு காட்டும் நம் காதலர் கருதுவது யாதோ? அதை நான் அறியேன்' என்று கூறினாள்.
'சிறந்த பேரழகும், மாந்தளிர் நிறத் தேமலும் உடைய என் மார்பை, அவர் கண்ணோடு ஒன்றாகப் பிணித்து வைத்தது போல், அத்துணை அருகில் இருந்து இமையாது கண்டு மகிழ்ந்தும், தன் வேட்கை தணியாராய், ஒளி வீசும் என் நெற்றியைத் தடவிக் கொடுப்பர். இப்புதுமை காட்டும் அவர் என்ன எண்ணியுள்ளாரோ? நான் அறியேன்' என்று கூறினாள்.
தலைவ! வழக்கத்திற்கு மாறாக நீ காட்டும் இப்பேரன்பு, யாதோ ஒரு காரணம் கருதியே காட்டப்படுகிறது என்று எண்ணி உள்ளம் நொந்து வருந்தும் துயர் உடையாள் என் தோழி; போகா முன்பே, பிரிவுக் குறிப்பறிந்தே, இவ்வாறு வருந்தும் அவள், கூட்டம் இல்லாமல் போகுமாறு, ஒருநாள் நீ பிரிந்து போய்விட்டால் உயிர் கொண்டு வாழ்வாளோ? உறுதியாக வாழமாட்டாள். ஆகவே, தலைவ! உன் உள்ளம் பொருள்மேல் வேட்கை கொண்டதால் நீ மேற்கொண்ட பிரிவுக் கருத்தை இப்போதே கைவிட்டு விடுவாயாக!
வல் என்ற-திண்ணிய. பித்தை-மயிர். அற்றம்-ஏற்றகாலம். அல்கும்-காத்திருக்கும். வம்பலர்-வழியில் புதியராக வருவார். புலம்பு-துன்பம். உள்ளினிர்-எண்ணங்கொண்டுள்ளாய். காழ்-முத்துமாலை. மீவரும்-கிடந்து அசையும். முயங்கியும்-தழுவியும்.