44
மா. இராசமாணிக்கனார்
மாண்இழை மடவரல் தாயிர் நீர் போறீர்?
பலவுறு நறும்சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை
மலையுளே பிறப்பினும், மலைக்கு அவைதாம்
என்செய்யும்?
நினையுங்கால், நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே.
சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லதை
15
நீருளே பிறப்பினும் நீர்க்கு அவைதாம் என்செய்யும்?
தேருங்கால், நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே,
ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை
யாழுளே பிறப்பினும் யாழ்க்கு அவைதாம் என்செய்யும்?
சூழுங்கால், நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே;
20
எனவாங்கு,
இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின்;
சிறந்தானை வழிபடீஇச் சென்றனள்;
அறந்தலை பிரியாஆறும் மற்று அதுவே."
தாய்: அந்தணப் பெருமக்களே! காயும் ஞாயிற்றின் கதிர்களைத் தான் தாங்கிக் கொள்ளும் குடையின் நிழலில், உறியில் தொங்கும் தண்ணீர்க்கமண்டலத்தையும் அரி, அயன், அரன் என்ற மூவரும் ஒருவரே என்பதை உலகுக்குக் காட்டும் முத்தலைக் கோலையும் தோளில் சுமந்து, நன்மையல்லது தீய நினைவுகளை நினைந்து அறியா நெஞ்சுடைமையால், ஐம்பொறிகளும் தாம் விரும்புமாறு சென்று அலையாமல், நீ ஏவிய வழி நடப்பதை முறையாகவும். ஒழுக்கமாகவும் பெற்று, வெப்பம் மிக்க இக்காட்டு வாழ்க்கையைக் கடமையாகக் கொண்ட பெரியோர்களே! என்மகள் ஒருத்தியும் வேறு ஒருத்தியின் மகனும் பண்டு தமக்குத் தாமே காதல் கொணடனர். அது இன்று பலராலும் அறிந்து கொள்ளப்பட்டது. அதனால் அவர்கள் இருவரும் ஒருமனப்பட்டு இக்காட்டு வழியே வந்து விட்டனர்; அவர்களைத் தாங்கள் கடந்து வந்த காட்டு வழியில் எங்கேனும் கண்டீர்களோ? கண்டீராயின் கண்ட விதத்தை யான் அறியக் கூறுங்கள்.
அந்தணர்: ஆணழகனாகிய அச்சிறந்தானோடு, கடத்தற்கரிய இக்காட்டு வழியில் செல்லத் துணிந்த, மாண்புமிக்க குணத்தைச் சிறந்த அணியாகக் கருதிய மடப்பம் மிக்க அவ்விளையோளைப் பெற்ற பெருமை வாய்ந்த தாயே! நீ கூறிய அவ்விருவரையும் காட்டு வழியில் பார்க்காதிருக்கவில்லை; பார்த்தோம்.