58
மா. இராசமாணிக்கனார்
வாழமுடியாத அவள் துயர்க்கொடுமை ஆகியவற்றை எடுத்துக்காட்டி, 'இன்பத்தை இளமைப் பருவத்திலேயே நுகர்ந்து விடுதல் வேண்டும்; இன்பம் நுகரும் வாய்ப்பு வரும்வரை இளமை காத்திராது; ஆனால், செல்வத்தை என்று வேண்டுமாயினும் சேர்த்துக்கொள்ளலாம்,' என்று கூறி அவன் போக்கை மாற்றியது இது.
"அரிமான் இடித்தன்ன அஞ்சிலை வல்வில்
புரிநாண் புடையின் புறங்காண்டல் அல்லால்
இணைப்படைத் தானை அரசோடு உறினும்,
கணைத்தொடை நாணும், கடுந்துடி ஆர்ப்பின்
எருத்து வலிய எறுழ்நோக்கு இரலை
5
மருப்பின் திரிந்து மறிந்துவீழ் தாடி,
உருத்த கடும் சினத்து ஓடா மறவர்
பொருள்கொண்டு புண்செயின் அல்லதை, அன்போடு
அருள்புறம் மாறிய ஆரிடை அத்தம்;
புரிபுநீ புறம்மாறிப் போக்குஎண்ணிப் புதிதீண்டிப்
10
பெருகிய செல்வத்தால் பெயர்த்தரல் ஒல்வதோ?
செயலையம் தளிர் ஏய்க்கும் எழில்நலம் அந்நலம்
பசலையால் உணப்பட்டுப் பண்டைநீர் ஒழிந்தக்கால்;
பொய்யற்ற கேள்வியாற் புரையோரைப் படர்ந்துநீ
மைஅற்ற படிவத்தான் மறுத்தரல் ஒல்வதோ?
15
தீங்கதிர் மதிஏய்க்கும் திருமுகம்; அம்முகம்
பாம்புசேர் மதிபோலப் பசப்பூர்ந்து தொலைந்தக்கால்,
பின்னிய தொடர்நீவிப் பிறர்நாட்டுப் படர்ந்துநீ,
மன்னிய புணர்ச்சியான் மறுத்தரல் ஒல்வதோ?
புரிஅவிழ் நறுநீலம் புரைஉண்கண் கலுழ்பு ஆனாத்
20
திரிஉமிழ் நெய்யேபோல் தெண்பனி உறைக்குங்கால்; எனவாங்கு,
அனையவை போற்றி, நினைஇயன நாடிக்காண்;
வளமையோ வைகலும் செயலாகும்; மற்று இவள்
முளைநிரை முறுவலார் ஆயத்துள் எடுத்தாய்ந்த
25
இளமையும் தருவதோ இறந்த பின்னே?"