கலித்தொகை - பாலைக் கலி
73
21. உலகத்து இயற்கை!
மனம் விரும்பி மணந்து கொண்ட மங்கையொருத்தியைப் பிரிந்து போய்ப், பொருளீட்டிவர விரும்பினான் ஒரு காளை. அஃதறிந்த அம்மங்கை நல்லாளின் தோழி, அவனைக்கண்டு, 'அன்று பாராட்டி அன்பு செய்து விட்டு இன்று பிரிந்து போவது பண்பன்று' எனக் கூறி வருந்துவதன் வழியாக அவன் மனக் கருத்தை மாற்றியது இது:
"உண்கடன் வழிமொழிந்து இரக்குங்கால் முகனும், தாம்
கொண்டது கொடுக்குங்கால் முகனும் வேறுஆகுதல்,
பண்டும் இவ்வுலகத்து இயற்கை; அஃதுஇன்றும்
புதுவது அன்றே; புலனுடை மாந்திர்!
தாய், உயிர் பெய்த பாவை போல,
5
நலன்உடையார் மொழிக்கண்தாவார்; தாம் தம்நலம்
தாதுதேர் பறவையின் அருந்து இறல்கொடுக்குங்கால்
ஏதிலார் கூறுவது எவனோ, நின் பொருள் வேட்கை?
நறுமுல்லை நேர்முகை ஒப்ப நிரைத்த
செறிமுறை பாராட்டி னாய்; மற்றும்எம் பல்லின்
10
பறிமுறை பாராட் டினையோ? ஐய!
நெய்இடை நீவி, மணிஒளி விட்டன்ன
ஐவகை பாராட்டினாய், மற்றுஎம் கூந்தல்
செய்வினை பாராட் டினையோ? ஐய!
குளன்அணி தாமரைப் பாசரும்பு ஏய்க்கும்
15
இளமுலை பாராட்டினாய்; மற்றுஎம் மார்பின்
தளர்முலை பாராட் டினையோ? ஐய!
எனவாங்கு,
அடர்பொன் அவிர்ஏய்க்கும் அவ்வரி வாடச்,
சுடர்காய் சுரம்போகும் நும்மை; யாம் எங்கண்
20
படர்கூற நின்றதும் உண்டோ, தொடர்கூரத்
துவ்வாமை வந்தக் கடை?”
அறிவுடைப் பெரியீர்! பொருளுடையவரிடத்தில் சென்று, பணிவான மொழிகளைப் பல முறை சொல்லி இரந்து நின்று கடன் வாங்கும் போது இருக்கும் முகமும் அக்கடனைத் திருப்பித்-