80
மா. இராசமாணிக்கனார்
வீமசேனன் அழித்துத், தன் உடன்பிறந்தார்களோடு பிழைத்து வெளியேறியது போல், கணைய மரம்போல் பருத்துத் திரண்ட துதிக்கையுடைய அந்த யானைகளைக் காக்கக் கருதிய வேழம், சூழ்ந்து புகைந்து எரியும் அத்தீயை மிதித்து வழிச்செய்து கொண்டு வெளியேறிச் செல்லும் குன்றும் கொதிக்கும் காட்டு வழியைக் கடந்து செல்லக் கருதினால், ஐய! இவள் நிலையைக் கூறுகின்றேன்; கேள்:
ஒருவர் தம் அருகில் இருக்கும் பொழுது அவர்க்குச் சிறப்புப் பல செய்து புகழ்ந்து போற்றிவிட்டு, அவர் அவ்விடம் விட்டு அகன்றவுடனே, அவர் குறைகளைக் கூறிப் பழிதூற்றிப் புறங்கூறும் இழிந்தோர் நட்புப்போல கூடியிருக்கும் காலத்தில், நீ கண்டு மகிழும்படி மலர்போலக் காட்சி அளித்து விட்டு, நீ சிறித பிரிந்தவுடனே உன்னைப் பழி தூற்றுவதுபோல் ஓயாது அழும் இயல்புடைய இக்கண் என்ற ஒரு பகை உளதல்லவோ?
ஒருவர் செல்வ வாழ்வில் வாழுங்காலத்தில், அவரோடு சேர்ந்திருந்து அவர் வளத்தை உண்டு வாழ்ந்துவிட்டு, அவர் வறுமையுற்ற காலத்தில் அவர்க்கு எவ்வித உதவியும் செய்யாத சிறியோர் நட்புப் போல், நீ இங்கே இருந்து அன்பு செய்யும் காலத்தில். இவள் முன் கையில் நீங்காதிருப்பது, அவளோடு அழகு பெற்று விட்டு, நீ ஒருநாள் பிரிந்தாலும், தளரும் தோள்களுக்குத் துணைபுரிவதற்குப் பதிலாக, கைகளைவிட்டுக் கழன்றோடும் வளை என்ற ஒருபகை உளது அல்லவா?
உள்ளம் கலந்த நட்புடைமையால், நண்பர் அறிவித்த மறையான ஒரு செய்தியை, அந்நண்பர் நீங்கிய உடனே பலர்க்கும் பறைசாற்றும் பண்பிலாதவர் போல், நீ, அன்பு காட்ட, ஒளிபெற்று விளங்கிவிட்டு, நீ அன்பை மறந்து அகன்றதும் உன் அன்பற்ற தன்மையைப் பலர்க்கும் பறைசாற்றுவதற்காக ஒளி இழந்து பசந்து போகும் நெற்றி எனும் ஒரு பகை உளது அல்லவா? என்று உன் மனைவியின் நிலையை எடுத்துக்காட்டிக் கூறக்கூடியது யாதுளது? நெடுந்தகாய்! இவ்வுண்மைகளை, எம்மைக்காட்டிலும் நீ நன்கறிந்துள்ளாய். ஆயினும் ஒன்று கூறுகிறேன்; மழை பெய்யாது மறுத்துவிட்ட காலத்தில் இவ்வுலகம் வருந்தி அழிவதுபோல், உன் அன்பு மாறிவிடும் போது, இவள் அழகும் அழிந்துபோகும்!
புணர்ப்பு-சூழ்ச்சி. கதழ்எரி-பெரு நெருப்பு. முளிகழை-உலர்ந்த மூங்கில். வளிமகன்-வீமசேனன். எழுஉறழ்-தண்டாயதத்தை ஒத்த. இறத்திரால்-போவதானால். மணக்குங்கால்-