உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலித்தொகை 2011.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலித்தொகை - பாலைக் கலி

91


வந்து விட்டது என்பதை, அவருக்குக் கூறுவார் யாரேனும் இருந்தால், எனக்காக, வாராது போனாலும், தம் ஆடல் பாடல் குறித்தாவது வருவார் எனக் கூறி வருந்தினாள். அவள் வருத்தத்தை அறிந்த பாணன் அவள் கணவனிடம் சென்று, அவள் துயர் கூறி, விரைந்து போமாறு வேண்டிக் கொண்டது இது:

"அருந்தவம் ஆற்றியார் நுகர்ச்சிபோல் அணிகொள,
விரிந்துஆனாச் சினைதொறூஉம் வேண்டும்தாது
                                                                                           அமர்ந்து ஆடிப்
புரிந்தார்க்கும் வண்டொடு புலம்புதீர்ந்து எவ்வாயும்
இருந்தும்பி இறைகொள எதிரிய வேனிலான்;
துயிலின்றி யாம் நீந்தத், தொழுவையம் புனலாடி 5

மயில்இயலார் மருவுண்டு மறந்துஅமைகு வான்மன்னோ
வெயில்ஒளி அறியாத விரிமலர்த் தண்காவில்
குயில்ஆலும் பொழுதுஎனக் கூறுநர் உளராயின்;
பானாள்யாம் படர்கூரப், பணைஎழில் அணைமென்தோள்
மானோக்கின் அவரோடு மறந்துஅமைகு வான்மன்னோ 10

ஆனாச்சீர்க் கூடலுள் அரும்பவிழ் நறுமுல்லைத்
தேன்ஆர்க்கும் பொழுதுஎனத் தெளிக்குநர் உளராயின்;
உறலியாம் ஒளிவாட, உயர்ந்தவன் விழவினுள்
விறலிழை யவரொடு விளையாடு வான்மன்னோ
பெறலரும் பொழுதோடு பிறங்கிணர்த் துருத்திசூழ்ந்து 15

அறல்வாரும் வையைஎன்று அறையுநர் உளராயின்;
எனவாங்கு,
தணியாநோய் உழந்துஆனாத் தகையவள் தகைபெற
அணிகிளர் நெடுந்திண்தேர் அயர்மதி, பணிபுநின்
காமர் கழல்அடி சேரா 20

நாமம்சால் தெவ்வரின் நடுங்கினள் பெரிதே."

சென்ற பிறவியில் தவம் செய்தவர்கள். இப்பிறவியில், குறைவில்லாத பேரின்பம் பெற்று மகிழ்வது போல், அரும்புகள், அழகு மிகும்படி நிறைய மலர்ந்து மணக்கும் கொம்புகளில், தான் விரும்பிய மலரில் தங்கித் தேன் உண்டு மகிழ்ந்து ஆரவாரிக்கும் தேன்வண்டோடு, கருநிறத்தும்பிகளும், பசி வருத்தம் தீர்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலித்தொகை_2011.pdf/92&oldid=1735735" இலிருந்து மீள்விக்கப்பட்டது