கலித்தொகை - பாலைக் கலி
93
ஆனாச் சீர்க்கூடல்-புகழால் மிகுந்த மதுரை. பிறங்கு-பெருமை. அறையுநர்-சொல்லுவார். தகைபெற-அழகுபெறும்படி. அயர்மதி-செலுத்துவாயாக.
30. வாளாதி வயங்கிழாய்!
மன்னன் ஒருவன், 'பனிக்காலம் கழித்து இளவேனிற் காலத்தில் வந்து விடுவேன்' என வாக்களித்து வேற்றுநாட்டின் மீது படையெடுத்துச் சென்றிருந்தான்; ஆனால், அவன் மனைவியோ பனிக்காலக் கொடுமையைத் தாங்கமாட்டாது தளர்வுற்றாள்; அந்நிலையில், மனைவியின் மென்மையை அறிந்து. பினபனிக் காலத்து இறுதிக்குள்ளாகவே வினைமுடித்துக்கொண்டு அவன் வந்து சேர்ந்தான். மகிழ்ச்சிக்குரிய அச்செய்தியைத் தோழி அவன் மனைவிக்குக் கூறியது இது:
"கடும்புனல் கால்பட்டுக் கலுழ்தேறிக் கவின்பெற,
நெடுங்கயத்து அயல்அயல் அயிர்தோன்ற, அம்மணல்
வடுத்தூர வரிப்பபோல் ஈங்கைவாடு உதிர்புஉகப்,
பிரிந்தவர் நுதல்போலப் பீர்வீயக், காதலர்ப்
புணர்ந்தவர் முகம்போலப் பொய்கைபூப் புதிதுஈன,
5
மெய்கூர்ந்த பனியொடு மேல்நின்ற வாடையால்,
கையாறு கடைக்கூட்டக் கலக்குறூஉம் பொழுதுமன்
பொய்யேம் என்று ஆயிழாய்! புணர்ந்தவர் உரைத்ததை
மயங்குஅமர் மாறுஅட்டு மண்வௌவி வருபவர்
தயங்கிய களிற்றின்மேல் தகைகாண விடுவதோ,
10
பயங்கெழு பல்கதிர் பால்போலும் பொழுதொடு
வயங்கிழை தண்ணென வந்தஇவ் அசைவாடை?
தாள்வலம் படவென்று தகைநன்மா மேல்கொண்டு
வாள்வென்று வருபவர் வனப்பு ஆர விடுவதோ,
நீள்கழை நிவந்தபூ நிறம்வாடத் தூற்றுபு
15
தோள்அதிர்பு அகம்சேரத் துவற்றும்இச் சின்மழை?
பகைவென்று திறைகொண்ட பாய்திண்தேர் மிசையவர்
வகைகொண்ட செம்மல்நாம் வனப்புஆர விடுவதோ,
புகை எனப் புதல்சூழ்ந்து பூவம்கள் பொதிசெய்யா
முகைவெண்பல் நுதிபொர முற்றிய கடும்பனி?
20