உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலியன் குரல்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலியன் குரல் இவர் ஏறி இவரும் குதிரை ஆடல்மா என்பது. இவர் இகவுலக வாழ்க்கையில் மிகவும் அதிகமாக ஈடுபட்டுக் கையில் வாளேந்திய கோலத்துடன் திரிந்து கொண்டிருந்தார். இப்படியிருந்த தாளில் త్ప్రళ நாட்டைச் திருவெள்ளக்குளம் என்ற ஊரில் மருத்துவத் மேற்கொண்ட தீ வைணவர் ஒருவர் இருந்தார். மகப்பேறு இல்லாதிருந்தது. கென்னக் குளம் என்ற தள்ள தாமரைப் பொய்கையில் சில தேவ கன்னிகையர் நாடோறும் நீராடும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தனர். ஒரு நாள் திருமா மகளும் தேவகன்னிகை வேடம்தரித்துக் கொண்டு அவர்களுடன் குமுதமல்ர் கொய்து கொண்டிருந்தாள். ஏனையவர் நீங்கிப்போக இவள் மட்டிலும் மானிட உருவை மேற் கொண்டுத் தனித்து நின்றாள். அப்போது மருத்துவர் அந்த இடத்திற்கு அதுட்டானத்தின் பொருட்டு வர நேர்ந்தது. அவர் தனித்து நிற்கும் இப்பெண் பிள்ளையைக் கண்டு பிள்ளாய், யார்? தனித்து நிற்கக் காரணம் என்ன?’ என்று வினவ, நீ அவளும் கூடவந்த மகளிர் என்னை விட்டு நீங்கினர்; இனி என்னை உம்மோடு வைத்துக்கொள்ளுவீர்? என்று தான் வந்த வரலாற்றை விரித்துரைத்தாள். மகப்பேறு இல்லா அந்தப் பாகவ தோத்தமர் மிகவும் உகப்புடன் இவளை யழைத்துக் கொண்டு போய்த் தன் துணைவிக்குக் காட்டித் தந்தார். அந்த அம்மை யாரும் இவளை மிக்க மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். இவள் குமுதமலர் கொண்டு நின்றதுவே காரணமாக குமுத வல்லியார் என்ற திருநாமமிட்டு அவர்கள் வளர்த்து வந்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/11&oldid=775484" இலிருந்து மீள்விக்கப்பட்டது