உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலியன் குரல்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

}{}9 அருளிச் செயல்கள் - இலக்கிய இன்பம் செய்வதற்கும் ಅಣ್ಣ நீராட்டுவதற்கும் யாதொரு வறுபடும் இல்லை; இதுதான் அது, அதுதான் இது" என்ற இரண்டிற்கு முள்ளவேற்றுமையின்மையைக் காட்டின படியாகும். நம்மாழ்வாரும் இதே கருத்தைத் தம் திருவாசிரி பத்தில் శాశ్వ6rఅఉత్ மனை நீராட்டி' என்று அருளிச் செய்துள்ளார். திருத்தாயார் பாசுரமாகச் செல்லும் ஒரு திரு மொழியில் பாசுரந்தோறும் ஒவ்வொரு பழமொழியை எடுத்துப் பேசுகின்றார் பரகாலர். இவற்றுள் ஒரு பாடல்: புள்ளுரு வாகி நள்ளிருள் ந்த பூதனை மாள இலங்கை ஒள்ளெரி மண்டி உண்ணப் பணித்த ஊக்க மதனை நினைந்தோர் கள்ளவிழ் கோதை காதலும் எங்கள் காரிகை மாதர் கருத்தும் பிள்ளைதன் கையில் கிண்ணமே ஏக்கப் பேசுவது? எந்தை பிரானே, 82 இப்பாசுரத்தில் *பிள்ளை கையில் கிண்ணம் மெள்ளவே கொள் ளலாம் என்ற பழமொழி அமைந்துள்ளது. மிகவும் வலிமை யுடையவர்கள் பொற்கிண்ணமொன்றை கவர்ந்தால் அதைத் திரும்பவும் கைப்பற்றுவதற்கு பெருமுயற்சி எடுக்க வேண்டும்; அங்ங்னமன்றிச் சிறுபிள்ளை கவர்ந்த கிண்ணத்தைத் திரும்பப் பெறவேண்டுமானால் அதற்காகச் சிறு முயற்சியையும் மேற் கொள்ள வேண்டியதில்லை. நினைத்தபோது எளிதாகப் பெற்றுக் கொள்ளலாம் என்று ஆறியிருக்கும்படியாக இருக்குமேயன்றி 89. திருவாசி-6 8. பெரி. திரு. - 10. 9. 82. பெரி. திரு. 10, 9: !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/116&oldid=775496" இலிருந்து மீள்விக்கப்பட்டது