உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலியன் குரல்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

! 18 கலியன் குரல் இவை கட்புலப் படிமங்கள்; வேரிமயிர் பொங்குதல், பேர்ந்து உதறுதல், மூரிதிமிர்தல், புறப்படுதல், போந்தருளுதல் இவை இயக்கப்புலப் படிமங்கள்: நிமிர்ந்து முழங்குதல் செவிப்புலப் படிமம். இவை கலந்து நிற்கும் நிலையில் கவிதையநுபவம் கொடுமுடியை எட்டிவிடுகின்றது. கவிதை அநுபவம்: நாம் ஒரு கவிதையை நுகர்ந்து மகிழ்ச்சிப் பெருக்கால் நம் உள்ளம் பூரிக்கும்போது நம் உடலினுள் நடை பெறும் மாற்றங்கரை அறிவியலடிப்படையில் விளக்க முயல்வேன். உண்ணும் உணவு செரிமானம் ஆகி உடலினுள் தன்வயம் ஆகும் போது நடைபெறும் செயல்களை நாம் அறிவோம். இங்ங்னமே நாம் ஒரு கவிதையை அநுபவித்து மகிழும்போது சில செயல்கள் நமது மூளையில் நடைபெறுகின்றன. இவற்றை விளக்குவேன். தமது உடல் நூண்டல் - துலங்கல் (Stimulus-Response) என்ற உளவியல் தத்துவப்படி இயங்குகின்றது. உள்ளமும் அதற் கேற்பத் துலங்குகின்றது. வெளிஉலகிலிருந்து தூண்டல்கள் புலன்களைத் தாக்கும்போது (Sensory level) அவற்றிற்கேற்பப் புலன்கள் துலங்குகின்றன. அதாவது, அப்புலன்கள் அத் தூண்டல்களால் கிளர்ச்சியடைகின்றன. அதனால் ஏற்படும் உணர்ச்சியை மனம் அநுபவிக்கின்றது. இந்த உணர்ச்சிப் பெருக்கில் உண்டாகும் இன்பமே - முருகுணர்ச்சியே - சுவை யாகும். எடுத்துக்காட்டாக, மணப்பொருள்கள் தரும் மணத்தை நாற்றப்புல நரம்புகள் வாங்கி மூளைக்கு அனுப்புகின்றன. மனம் அப்பொருள்கள் நல்கும் மணத்தை அநுபவிக்கின்றது. ஊது வத்தியின் மணம் செயற்படுவதைக் கருதினால் இவ்வுண்மை தெளிவாகும். இங்ங்னமே பிற புலன்களின் மூலம் பெறும் தூண்டல் களால் மனம் அந்தந்தப் பொருள்கள் தரும் சுவைகளைப் பெற்று அவற்றில் ஈடுபடுகின்றது.இவ்வாறு வெளியுலகத் தூண்டல்களால் அடிக்கடி மனம் பெறும் அநுபவம் பெரு மூளையில் பதிவாகிவிடு கின்றது. உலகை இன்பமயமாகக் கண்டு உள்ளத்தில் பூரிப்பு அடைபவர்களே கவிஞர்கள். ஆழ்வார்கள் போன்ற ஞானச் செல்வர்கள் உள்ளத்தில் கனிவு அடைந்தவர்களாதலின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/125&oldid=775517" இலிருந்து மீள்விக்கப்பட்டது