உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலியன் குரல்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 கலியன் குரல் ஒரு சிலந்திக் குண்டான ஸ்வபாவம் சர்வசக்திக்குக் கூடா தொழியகிறே" என்ற தத்துவத்திரயய வாக்கியமும் ஈண்டு நோக்கி உன்னற் பாலதாகும். ஈசுவரன் அனைத்திற்கும் ஆதாரமானவன; அனைத் தையும் அடக்கி ஆள்பவன்; அனைத்தினுடைய பலனையும் அநுபவிப்பவன். மேலும் அசித்து (இவ்வுலகப் பொருள்) மாறுபாடடைவதற்கும், உயிர்கள் தத்தம் வினைகட் கேற்ப உடல்களை அடைவதற்கும் இவனே காரணன். கருமமும் கரும பலனும் ஆகிய காரணன்ச்ே என்பர் சடகோபர். தன்னை அடைந்தவருடைய எல்லா வினைகளையும் போக்குபவன், சகல வேதங்களாலும் போற்றப்பெறுவன். இந்த உலகிலுள்ள உயிர்களின் பக்திமூலமும் பிரபத்திமூலமும் வீடுபேற்றினை அடைவதற்கு இவனே துணையாவான். தாய் தினைந்த கன்றேயொக்க என்னையும் தன்னையே நினைக்கச் செய்து தான் எனக்கு ஆய்தினைந்து அருள்செயும் அப்பனை% என்பர் கலியன். கன்றானது எப்போதும் தன் தாயையே தினைத்துக் கொண்டிருக்குமாப்போலே உலகுக் கெல்லாம் தாயாகிய தன்னையே தானும் (ஆழ்வாரும்) நினைத்திருக்கு மாறு செய்தவன் என்கின்றார். - - நித்தியவிபூதியாகிய பரமபதத்தில் இவனுக்கெனத் தனி யான திவ்வியம்ங்கள் உருவம் உண்டு. 33. தத். ஈசுவரப்-29 34. திருவாய், 3.5:10 85. பெரி.திரு. 7.3:2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/143&oldid=775556" இலிருந்து மீள்விக்கப்பட்டது