உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலியன் குரல்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

t38 கலியன் குரல் இருப்பு. வியூகம் என்பது, பரவாசுதேவன் லீலாவிபூதியில் (இந்த உலகில்) அதன் படைப்பு அளிப்பு அழிப்பு இவற்றை நடத்துவதற்காகவும், சம்சாரி கட்கு வேண்டியவற்றை ஈந்து வேண்டாவற்றைப் போக்கி அவர்களைக் காத்தற்பொருட்டும், வீடுபேற்றிணை விரும்பித் தன்னை இடையறாது உபாசிப்பவர் கட்கும் (நினைப்பவர்கட்கும், அவர்களது தளைகளைப் போக்கித் தன்னை வந்தடைவதற்குக் காரணமான பேரருளைச் சுரப் பதற்காகவும், வியூகவாசதேவன், சங்கர்ஷணன்,பிரத்யும்னன், அதிருத்தன் என்ற பெயர்களுடன் வடிவங் கொண்டு இருக்கும் நிலை. இவற்றுள் வாசுதேவ வடிவமான பரத்துவத்தில் ஞானம், சக்தி, பலம், ஐசுவரியம், வீரியம், தேஜஸ் என்ற ஆறுகுணங் களும் நிறைந்திருக்கும். ஏனைய மூன்றிலும் அவரவர் மேற் கொண்ட செயலுக்குத் தக்கவாறு ஒவ்வொன்றிலும் இரண்டி ரண்டு குணங்கள் விளக்கம் பெற்றிருக்கும். கினை வியூகங்கள்: மேற்குறிப்பிட்ட நான்கு வியூகங்ளும் ஒவ்வொன்றும் மும்மூன்றாகப் பன்னிரண்டு கிளை வியூகங் களாகப் பிரியும். வியூகவாசுதேவனிடத்துக் கேசவன் நாரா யணன், மாதவன் என்ற கிளைகளும்; சங்கர்ஷ்ணனிடம் கோவிந்தன், விஷ்ணு, மதுசூதன் என்பவைகளும் பிரத்யும்னனி டத்து திரிவிக்கிரமன், வாமனன், சிரீதரன் என்பவைகளும்; அதிருத்தனிடத்து இருடிகேசன், பத்மநாபன், தாமோதரன் என்பவைகளும் தோன்றி அவ்வப்பெயர்களைப் பெறும்'. இவை யாவும் பன்னிரு திங்களின் தலைவர்களாக இருக்கும். இவற்றின் அறிகுறியாக வைணவர்கள் தம் உடலில் துவாதசமாகத் திரு மண் காப்பிட்டுக் கொள்வர். இப்பன்னிரு திருமண்காப்பும் வைணவர் திருமேனியில் மேற்சொன்ன பன்னிருவரும் அதிட்டித் திருக்கும் இடங்களைக் குறிக்கும். விபவம்: விபவ அவதாரங்கள் எண்ணிறந்தவை; யாவும் பகவானது இச்சையாலே வந்தவை. இவை ஆதிஅம் சோதி 40. 2.7. (பன்னிரு திரு நாமப்பாட்டு).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/145&oldid=775560" இலிருந்து மீள்விக்கப்பட்டது