உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலியன் குரல்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#43 கலியன் குரல் னவை மக்களிடையே தோன்றி அதிகக் கால அளவு பழகினமை யே இதற்குக் காரணமாகக் கொள்ளலாம். இதன் காரணமாக இறைவனின் மங்க ைகுணங்களை மக்கள் அநுபவிப்பதற்கு வாய்ப்புகள் மிக்கு இருந்தன. ஆகவே, ஆழ்வார்களும் அவற்றில் அதிகமாக ஈடுபட்டுப் பேசுகின்றனர். அக்தர்யாமித்துவம்: சேதநர்களின் உள்ளேபுக்கிருந்து எல் லாச் சேயல்கட்கும் தான் ஏவுபவனாக இருப்பதோடு, அவர்கட்குத் தி:ான ருசி பிறந்தபோது தியானத்திற்கு உரிய னாவதற்காகவும், அவர்களைக் காப்பதற்காகவும், அழகே வடிவெடுத்தாற்போன்ற மங்களகரமான திருமேனியுடன் எல்லா ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பேற்றவனாய், பெரியபிராட்டியா ரோடு கட்டைவிரல் அளவாக ஒவ்வொருவர் இதய கமலத்துக் குள்ளே எழுந்தருளியிருக்கும இருப்பே இந்த நிலையாகும். கல்லும் கனைகடலும் வைகுந்த வான் நாடும் புல்லென்று ஒழிந்தனகொல் ஏபாவம் வெல்ல நெடியான் நிறங்கரியான் உள்புகுந்து நீங்கான் அடியேனது உள்ளத்து அகம் 4 என்று நம்மாழ்வார் பேசுவது இந்த நிலையையே யாகும், அர்ச்சாவதாரம்: ஆர்ச்சாவதாரம் என்பது, 'தமருகந்தது எவ்வுருவம் அவ்வுருவம்’ ’ என்ற பொய்கையார் பாசுரப்படி அன்பர்கள் எதைத் தனக்குத் திருமேனியாகக் கொள்கின்றனரோ அதனைய இறைவன் இன்ன இடத்தில் இன்ன காலத்தில் இன்னாரிடத்தில் தோன்றி சந்நிதி பண்ணவேண்டும் என்கின்ற நியமமில்லாதபடி தான் விரும்பிய எந்த இடத்திலும் எந்தக்காலத்திலும் எவரிடத்திலும் தோன்றிச் w***wwwww. 44. பெரிய திருவந், 58 45. . முதல் திருவந், 44

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/147&oldid=775567" இலிருந்து மீள்விக்கப்பட்டது