உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலியன் குரல்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 கலியனின் வாழ்வும் வழியும் யுடன் போராடிய கவிஞர் ஒருவர் நின்றவூரை நோக்கி வருங்கால் இருட்டிவிடுகின்றது. நின்றதுருக்கு அருகிலுள்ள ஒரு சிற்றுாரில் ஒரு சத்திரத்தில் தங்குகின்றார் கவிஞர். அன்றிரவு உறக்கம் சரியாக வரவில்லை. அங்குள்ளவர்களிடம் பேச்சு கொடுக்கின் றார்; இடையில் தன் கவலையையும் சொல்லுகின்றார். அவர்கள் காளத்திவாணரின் கொண்டத் தன்மையைப் பலபடப் புகழ்ந்து பேசுகின்றனர். அவ்வள்ளல் கவிதைகளைச் சுவைக் கும் திறத்தையும் பாராட்டிப் புகழ்கின்றனர். மறு நாள் அவ் வள்ளலைக் கண்டுவிட்டால் தம் வறுமைக்கு ஒரு செண்ட் ஆப்' தந்து விடலாமே என்று கருதுகின்றார் புலவர். நீண்ட நாளாகத் தன்னோடு பிறந்து வளர்ந்த வறுமையைப் பிரிய மனமும் இல்லை. தம்மிடம் இந்த ஒரு நாளாவது இருந்துவிட்டுப் போகட்டுமே என்று பரிவுடன் நினைக்கின்றார். இந்த பரிவு ஒரு பாட்டு வடிவம் பெறுகின்றது. நீளத்திரிந்து உழல்கின்றாய் நீங்கா நிழல்போல நாளைக்கு இருப்பாயோ? நல்குரவே! - காளத்தி நின்றைக்கே சென்றக்கால் நீளங்கே? நான் எங்கே? இன்றைக்கே சற்றே இரு. என்பது அப்பாடல் இப்பாடலை நினைந்து சுவைக்கின்றோம். அடுத்து நடுநாட்டுத்திருத் தலங்களாகிய திருக்கோவலுர். திவ்வியப்பிரபந்தம் தோன்றிய இடம்) திருவயிந்திரபுரம் ஆகிய இரண்டு திருப்பதிகளையும் சேவித்து மங்களாசாசனம் செய்கின் றார். பின்னர், சோழநாட்டுத் திருப்பதிகளை மங்கராசாசனம் செய்யத் திருவுள்ளம் பற்றின. ஆழ்வார் தில்லைத் திருச்சித்திர கூடம் என்னும் திருப்பதியில் இழிகின்றார். சித்திர கூடம் என்பது விசித்திரமான சிகரங்களையுடையதெனப் பொருள்படும் காரணப் 37; தனிப்பாடல் திரட்டு : பாடல் 855 நிகழக வெளியீடு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/30&oldid=775616" இலிருந்து மீள்விக்கப்பட்டது