உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலியன் குரல்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலியன் குரல் அடிமையிற் சிறந்து விளங்கிய அடியாரென்றும், மறந்தும் புறந் தொழ மாண்புடையாளர் என்றும் இவரது திருவாக்கினைக் கொண்டே தெளியலாம். இந்த ஆழ்வார் திருமாற்கே பரத்துவம் கூறுவார். அவரது அவதாரங்களையும் அவற்றில் திகழ்த்திய ஆருஞ்செயல்களையும் நயம்படப் பாராட்டுவர்" பிரமன், சிவபெருமான், முருகன் இவர்கட்கு மேலான தெய்வம் திருமால் என்பர். திருமால் பக்தியில் ஈடுபட்டு அவனுக்குத் தான் தொண்டு பூண்ட தன்மையையும் தன்னை அவன் ஆட்கொண்ட பெருமையையும், அழியும் மாலைத்தாகிய பல்வகை உறவினைக் காட்டிலும் என்றும் அழியாது பவக்கடலினின்றும் ஏற்ற வல்ல அழியா உறவாகிய கோவிந்தனது அருட்டிறத்தையும் பலவிடங்களிலும் உள்ளுருகிப் பாடியுள்ளார். தாம் இன்பத் துறையில் எளியனாகிப் பலவாறு வருந்தி நின்றதும் பலவிடங்களிலும் குறித்துக் காட்டப்பெறும். 'வாடினேன் வாடி’ என்று தொடங்கும் முதல் திருமொழி முதற்பாசுரத்தில், மகளிர் கலவியே கருதி ஓடியதும், பின்னர் இறைவன் அருளைத் தேறித் தெளிந்ததும் அழகுபடக் கூறியிருப்பதைக் காணலாம். இறைவனை எம்பிரான் எந்தை, என்னுடைச் சுற்றம், எனக்கரசு என்னுடய வானாள் என்பர். மற்றும், சிலம்படி யுருவிற் கருநெடுங் கண்ணார் திறத்தனாய் அறத்தையே மறந்து புலம்படித் துண்ணும் போகமே பெருக்கின் என்ற அடிகளும் இவர் மகளிர் வலையிற் சிக்கிக் கலங்கி பதைத் தெரிவிக்கும். காளைப் பருவத்தில் தான்றோன்றியாகக் கயவருடன் திரிந்துழந்ததையும், பின்னர்ப் பெருமான் அருளால் 54, সমg. P. কয় চড়ে ীে 4,9 έ: i 0. 8: 7; 6. 3: ύς 6.9: 7 திருநெடுந். 20, கீ.ே பெரி. திரு 1.1: 5 7ே: டிே 1, 3; 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/43&oldid=775632" இலிருந்து மீள்விக்கப்பட்டது