உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலியன் குரல்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98. கலியன் குரல் என்பது அவர் காட்டும் சோலை, ஒளிமல்குகின்ற முத்து களையும், அழகிய பவளத்துளிர்களையும் மலர்ந்த தாமரைப் பொய்கைகளையும் உடைத்தான சோலைகளால் சூழப்பட்டது திருப்புல்லாணி' என்கின்றார். தாதுமல்கு தடம்சூழ் :பாழில் (3) போது நாளும் கமழ் பொழில் சூழ்ந்த, புல்லாணி (3), செழுந்தடம் பூஞ்சோலை சூழ் புல்லாணி’ 19. 4:5), பூஞ்செருந்தி பொன் சொரியும், புல்லாணி’ (8), போதலரும் புன்னை சூழ் புல்லாணி (9) என்ற அப்பெருமானின் வாக்குகளை எண்ணி மகிழ்கின்றோம். மேலும், கள்ளவி ழும்மலர்க் காவியும் துரமடற் கைதையும் புள்ளும் அள்ளற் பழனங்களும் சூழ்ந்த புல்லாணி ' (கன்-மது; அவிழும்-ஒழுகும்; காவி.செங்கழுநீர்ப் பூ; து.ாமடல் - வெளுத்த மடல்; கைதை தாழை; அள்ளல் - சேறு, பழனம் - வயல்) என்று அந்தத் திவ்விய தேசத்தின் சூழலை நெய்தல் நிலக் கருப்பொருளைக் கொண்டே வருணித்திருக்கும் எழில் நலம் நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுகின்றது. ஆயினும், இன்று அச்சூழ் நிலையை நாம் காணமுடிகின்ற தில்லை! புதிய இலக்கில உத்திகள்: சங்க இலக்கியக் காலத்திற்குப் பிறகு பக்தி இயக்கக் காலத்தில் யாப்புமுறையிலும் விரைப்பான நடைப் போக்கிலும் முற்றிலும் மாறியன. கற்றவர்க்கு உரியன வாகப் பாடப் பெற்ற பாடல்களின் போக்கு மாறி கற்றவர்களோடு மற்றவர்களும் கூடிக்களிப்புடன் பாடுவதற்கு ஏற்றவாறு சந்தக் கொழிப்பும் இசை ஏத்தமும் கொண்ட பாசுரங்கள் பெருகின: 1. பெரி. திரு. 9. 3: கி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/57&oldid=775649" இலிருந்து மீள்விக்கப்பட்டது