உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலியன் குரல்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# ł 蔷 கவியன் குரல் பதறவேண்டிய நிலை ஏற்படாது. அதுபோல இப்பரகால நாயகி விஷயத்தில் நீ நினைத்திருக்கின்றாய் போலும்; இவளை அவ் விதமாக அலட்சியம் செய்திருக்கின்றாய்” என்கின்றாள் திருத் தாயார். இதனை மேலும் விளக்குவேன். எங்கள் கள்ளவிழ் கோதையின் காதலையும் அலட்சியம் செய்கின்றாய்; காரிகை மாதர்கருத்தையும் அலட்சியம் செய்கின்றாய். இவளுடைய கரை புரண்ட காதலை நோக்கி நீ பதறியோடிவந்து இவளைக் கைப் பற்ற வேண்டும்; அது செய்கின்றிலை, வகுத்த விஷயத்தில் காதல் கொண்ட இது நன்றே என்று உகந்திடாமல் இதனைப் பழிக்கின்ற ஊரவர் பழிச்சொற்களை நோக்கியாகிலும் பதறியோடி வந்து இசைக் கைப்பற்றிப் பழிப்பவர்களின் முகத்தைப் பங்கம் செய்திடவேண்டும்; அதுவும் செய்கின்றிலை, இரண்டையும் அலட்சியம் செய்திருக்கின்றாய்” என்கின்றாள். இப்படி இவளை இலட்சியம் செய்திருப்பதற்குக் காரணம் யாது? நல்லவெண்தோழி தாகனை மிசை நம்பார், செல்வர் பெரியர், சிறு மானிடவர் நாம் செய்வதென்' என்னும்படியான உன்னுடைய பெருமைகளைப் பாராட்டியோ இவளை இங்ங்ணம் அட்சியம் செய்திருப்பது?’ என்கின்றாள். 'பூதன யை முலை யுண்டு முடித்த :ெகுமிடுக்குடை. தமக்கு இவள் ஈடோ? இரா வணனை முடித்த பெருவிரனான எனக்கு இவள் ஏற்றவளாக இருப்பாளா? என்று திருவுள்ளம் பற்றியிருக்கின்றாய் போலும்; கிருட்டினால் தசரத்திலும் இராமாவதாரத்திலும் காட்டின தீரச் செயல்களை நினைத்துச் செருக்கியிருக்கின்றாய் போலும்!” என்கின் தாள். படிமங்கல் : பாசுரங்களில் காணப்பெறும் படிமங்கள் (Imagery) பாட்டின்பத்தை மிகுவிக்கின்றன. படிமம் என்பது என்ன? படிமம் என்பது சொற்களால் கவிஞன் புலன்கட்குக் கவர்ச்சியுடையதாகச் செய்யும் ஒருவகை உத்தியாகும். புலன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/69&oldid=775662" இலிருந்து மீள்விக்கப்பட்டது