உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலியன் குரல்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 அருளிச் செயல்கள்-இலக்கிய இன்பம் பாசுரத்திலும் இயற்கை எழில் கொழிக்கும் அவன் வீற்றிருக்கும் நிலப்பகுதியை இன்னொரு பாதிப் பாசுரத்திலுமாக இயைத்துக் காட்டுவார், இருங்கைமா கரிமுனிந்து, பரியைக் கீறி, இனவிடைகள் ஏழடர்த்து, மருதம், சாய்த்து, வரும்சகடம் இறஉதைத்து மல்லை அட்டு வஞ்சம்செய் கஞ்சனுக்கு நஞ்சா னானை, கருங்கமுகு பசும்பாலை வெண்முத்து, ஈன்று காய்எல்லாம் மரகதமாய் பவளம் காட்ட, செருந்திமிக மொட்டலர்த்தும் தேன்கொள் சோலைத் திருக்கோவ லூர்.அதனுள் கண்டேன், நானே : இருகை - நீண்டதுதிக்கை; கரி - யானை; முனிந்து - கோபித்து;மல் - மல்லர்கள்; அட்டு - கொன்று; மரகதம் - பச்சைக்கல்; செருந்தி - சுரபுன்னை) என்பது பாசுரம். பாசுரம் பாலடை பிசுகோத்து (Cream biscuit) போல் இனிக்கின்ற தல்லவா? இயற்கையில் தோய்ந்து இலக் கிய இன்பம் நுகர்வாருக்கும் இனிக்கும்; இறையதுபவத்தில் உள்ளத்ைைதப்பறி கொடுப்பார்க்கும் தித்திக்கும்; இரண்டிலும் ஈடுபடுவார்க்கும் பக்தி வெறியில் கொண்டுசெலுத்தும். இஃது ஆழ்வார் பாசுர இயல்புக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. திரு அயிந்திர புரத்திற்கு வருகின்றோம் . 1956-இல் என்று நினைக்கின்றேன். கடலூரில் ஒர் உணவு விடுதியில் தங்கி காலை ஏழரை மணிக்கு ஒரு பேருந்தில் கிளம்பினேன். அது சனவரி மாதத் தொடக்கம்; மழை பெய்து ஓய்ந்து போன காலம். சாலையின் இருபுறத்தினுள்ள சோலைகளும் வயல் களும் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தன. சோலைகளில் திரள்திரளாக வண்டுகள் புகுந்து மதுவைப் பருகிக் களித்து அக்களிப்புக்குப் போக்குவீடாக இனிய இசைகளைப் பாடிக் கொண்டு உலவா நிற்கின்றன; உலாவும்போது செறியப்பூத்த சுரபுன்னை மாங்கள் தென்படவே, அவற்றிலும் மதுவைப் ਡਾ਼ ? கீ4. டிெ, 3, 1.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/86&oldid=775684" இலிருந்து மீள்விக்கப்பட்டது