பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அலுமினியம்

219

அலுமினியம்

அலுமினியம் ஆக்சைடின் வடிவங்கள் பாக்சைட்டு (Bauxite), கிரையோலைட்டு (Kryolite), டர்க்காயிஸ் ('Turquoise), அலுனைட்டு (Ailunite), ஸ்பைனல் (Spinal) என்பவை சில அலுமினியக் கனியங்கள். இவற்றுள் பாக்சைட்டும் கிரையோலைட்டும் முக்கியமானவை. அயர்லாந்து, பிரான்சு, வட ஆப்பிரிக்கா, கிழக்கிந்தியத் தீவுகள், அமெரிக்க ஐக்கிய நாடுகள், கானடா, ரஷ்யா ஆகிய பகுதிகளில் பாக்சைட்டு அதிகமாக உள்ளது. இந்தியாவில் அலுமினியக் கனியங்கள் நாட்டின் பல பகுதிகளில் கிடைக்கின்றன. தமிழ் நாட்டில் சேலம் ஜில்லாவில் பாக்சைட் உள்ளது. அலுமினிய உற்பத்தி இந்தியாவில் 1943-ஆம் ஆண்டில் துவங்கியது. இப்போது ஆண்டிற்கு 8,000 டன் உலோகம் உற்பத்தியாகிறது.

பிரித்தெடுத்தல்: பாக்சைட்டிலிருந்து இதைப் பிரித்தெடுக்க இது முதலில் மிக நன்றாகச் சுத்தப்படுத்தப்படுகிறது. பின் நன்றாக அரைக்கப்பட்டுத் தாழ்ந்த வெப்பத்தில் சுடப்படுகிறது. சோடாக்காரக்கரைவில் இதைக் கரைத்தால் கனியத்திலுள்ள அலுமினிய ஆக்சைடு மட்டும் கரைந்து அசுத்தங்கள் பின்தங்கி விடுகின்றன. இக்கரைவுடன் சிறிது சோடியம் ஹைடிராக்சைடைச் சேர்த்துப் பல மணி நேரம் கலக்கினால் அலுமினியம் ஹைடிராக்சைடு படிகிறது. இதை வடிகட்டிப் பிரித்துக் கழுவி உலர வைக்கலாம்.

அலுமினியம் ஆக்சைடிலிருந்து உலோகத்தைப் பெற மின்பகுப்பு முறை வழங்குகிறது. அலுமினியம் ஆக்சைடு

அலுமினியத்தைப் பிரித்தல்


A-கலவை
B-அலுமினியம்
C- கரியாலான உட்புறம்
D- கார்பன் குச்சிகள்

E-வடிக்கும் முளை

20 பாகமும், கிரையோலைட்டு 60 பாகமும், புளோர்ஸ்பார் 20 பாகமும் கொண்ட கலவையை இளக்கி, மின் பகுப்பால் அலுமினியம் பிரித்தெடுக்கப்படுகிறது. மின் பகுப்புக் கலம் ஓர் இரும்புத் தொட்டி. இதன் உட்புறம் கரியால் பூசப்பட்டு எதிர் முனையாக இயங்குகிறது. தொட்டிக்குள் தொங்க விடப்படும் சில கார்பன் குச்சிகள் நேர்முனையாக இயங்கும். மின்சாரம் பாயும்போது எதிர்முனையில் அலுமினியம் வெளிப்பட்டுத் திரவ நிலையில் கலத்தின் அடியில் சேர்கிறது. இதை வடித்து எடுத்துவிடலாம். கார்பனால் ஆன நேர்முனையில் ஆக்சிஜன் தோன்றி, அதை எரித்துக் கார்பன் மானாக்சைடாக வெளிப்படுகிறது. அவ்வப்போது புதிதாக அலுமினியம் ஆக்சைடைச் சேர்த்துப் பகுபொருளின் செறிவு மாறாமற் செய்ய வேண்டும். இதிற் கிடைக்கும் அலுமினியம் 99% சுத்தமானது. மின்பகுப்பால் இதை மேலும் தூய்மையாக்கலாம்.

தன்மைகள் : அலுமினியம் வெண்மையான உலோகம். இலேசான பொருளான இதன் இழுவலிமை இரும்பையும் செம்பையும் தவிர மற்றெல்லா உலோகங்களையும் விட அதிகம். இதற்கு நன்றாக மெருகேற்றலாம். இதன் உருகுநிலை 658°. இது பல உலோகங்களுடன் கலவையாகிறது.

வறண்ட காற்றோ, ஆக்சிஜனோ இதைப் பாதிப்பதில்லை. ஈரமான காற்றும், கொதிக்கும் நீரும் இதன் மேல் அலுமினியம் ஆக்சைடைப் படிவிக்கும். இதனுடைய ரசக்கலவை நீராவியைச் சிதைக்கும். நுண்ணிய தூளான அலுமினியம் மிகப் பிரகாசமான ஒளியுடன்

அலுமினிய உலைகள்

திருவிதாங்கூர்-கொச்சியில் ஆல்வாய் அருகில் உதவி இந்திய அலுமினியம் கம்பனி, லிமிடெட்.

ஆக்சிஜனில் எரியும். இரும்பு, குரோமியம் அல்லது மாங்கனீஸ் ஆக்சைடுகளுடன் அலுமினியத் தூளைக் கலந்து பற்ற வைத்தால் மும்முரமான வினை நிகழ்ந்து ஆக்சைடு உலோகமாகக் குறையும். எஃகை இளக்கவும் இணைக்கவும் வழங்கும் தெர்மைட்டு முறைக்கு (Thermite process) இந்த வினை அடிப்படையானது. குரோமியம், மாங்கனீஸ், யுரேனியம் போன்ற உலோ கங்களைத் தயாரிக்கவும் இம்முறை பயனாகிறது. அலுமினியமானது குளோரினுடனும் நைட்ரஜனுடனும் நேரடியாகக் கூடுகிறது. சூடான, அடர் ஹைடிரோ குளோரிக் அமிலத்திலிருந்து இது ஹைடிரஜனை வெளிப்படுத்துகிறது. நீர்த்த கந்தகாமிலமாவது நைட்ரிக் அமிலமாவது இதைப் பாதிப்பதில்லை. அடர் கந்தகாமிலத்தில் இது விரைவாகக்கரைந்து கந்தகடையாக்சைடை வெளிவிடுகிறது. சூடான காரக் கரைவுகளில் இது கரைந்து, ஹைடிரஜனை வெளிவிட்டு அலுமினேட்டுகளை அளிக்கிறது. உப்புக்கரைவுகளில் இது அரிப்புற்றுப் போகும்.

அலுமினியத்தைத் தகடாக்கல்
கல்கத்தா அருகில் பேலூர்த் தொழிற்சாலை
உதவி : இந்திய அலுமினியம் கம்பனி, லீ மீ டெட்,


பயன்கள் : அழுத்தம் அதிகமான மின்சாரத்தைக் கடத்தச் செம்பைவிட இலேசான அலுமினியக் கம்பி-