உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/558

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இசை

509

இசை

E மேஜா மூன்றாவது (Major Third) காந்தாரம்
F மெய் நாலாவது (True Fourth) சுத்த மத்யமம்
G மெய் ஐந்தாவது (True Fifthi) பஞ்சமம்
A மேஜர் ஆறாவது (Major Sixth) தைவதம்
B மேஜர் ஏழாவது (Major Seventh) நி நிஷாதம்
C’ ஆக்டேவ் (Octave) ஸ் மேல் ஷட்ஜம்

விகிதம் 9/8ஐ மேஜர் டோன் என்பார்கள்.
வீகிதம் 1019ஐ மைனர் டோன் என்பார்கள்.
விகிதம் 16/15ஐ செமி டோன என்பார்கள்.

இந்துஸ்தானி சங்கீத வித்துவான்கள் மேல் காட்டியிருக்கும் ரி, க, ம, த, நி சுரங்களை சுத்த சுரங்கள் என்று கூறுவார்கள்.

ஒரு ஸ்தாயியென்பது 3 மேஜர் டோன். 2 மைனர் டோன், 2 செபி டோன்கள் மேல் சென்று ஆக்கப்பட்டது.

9/8X10/9X16/15X9/8X10/9X9/8X16/152

பன்னிரண்டு சுரங்களுக்கும் பெயர்களை முன் பக்கத்திலுள்ள அட்டவணையில் காணலாம்:

ஒவ்வொரு மேள ராகத்திற்கும் அவசியமாக ஸ, ப உள்பட ஏழு சுரங்கள் ஆரோகணத்திலும் அவரோகணத்திலும் இருக்க வேண்டும் என்பது கொள்கை. சுத்த மத்யமம் உள்ள இராகங்கள், பிரதி மத்யமம் உள்ள இராகங்கள் என்று இராகங்களை இரண்டு வகையாக வகுத்திருக்கிறார்கள் ரி, க, த, நி க்கு ஒவ்வொன்றிற்கும் சுரஸ்தான பேதங்கள் 2தான் என்று எண்ணின பொழுது, உள்ள அட்டவணையில் கண்டவாறு சுரக் கோவையைத் தீர்மானம் செய்தார்கள்.

பூர்வாங்கத்தில் உள்ள ரி, க என்ற சுரங்களின் இரண்டு ஸ்தான பேதங்களினால் 4 கோவைகள் கிடைக்கின்றன. அதே போல உத்தராங்கத்தில் உள்ள த, நி என்ற சுரங்களால் 4 கோவைகள் கிடைக்கும். இவைகளை மாற்றி மாற்றி ஒன்றுடனொன்று சேர்க்கும் போது, 16 கோவைகள் உண்டாகும். ஆகவே சுத்த மத்யம இராகங்கள் 16ம், ப்ரதி மத்யம இராகங்கள் 16ம் பிறக்கின்றன. ஒரு காலத்தில் மேளராகங்கள் இந்த 32தான் என்று கருதியிருந்தனர்.

ஏதாவது ஒரு ரிஷப ஸ்தானத்தை, அதன் மேல் சுரஸ் தானமான காந்தார ஸ்தானத்துடன் சேர்க்க முடியும் என்றும், தைவத, நிஷாதங்களையும் அப்படியே சேர்க்க முடியும் என்றும், அவ்வாறு செய்து மேளராகங்களை உண்டாக்கலாம் என்றும் வேங்கடமகி (1633-1673) கண்டறிந்தார். அவர் ரி,,த,நி இந்த 4 சுரஸ்தானங்களுக்கு ஒவ்வொன்றுக்கும் இரட்டைப் பெயர் கொடுத்தார். ஆகவே, பூர்வாங்கத்தில் 6, உத்தராங்கத்தில் 6 கோவைகள் கிடைத்தன. இவற்றிலிருந்து, சுத்த மத்யம ராகங்கள் 6X6 = 36, ப்ரதி மத்யம ராகங்கள் 36, ஆக மொத்தம் 72 மேள ராகங்கள் கிடைத்தன.

வேங்கடமகி இந்த 72 மேள ராகங்களுக்குப் பெயர் இடவில்லை. அவர் காலத்தில் 19 மேள ராகங்கள்தாம் உண்டு. தஞ்சாவூர் துலஜா ராஜா காலத்தில் (1729-35) 21 மேள ராகங்கள் பழக்கத்திலிருந்தன என்று அவர் எழுதிய சங்கீத சாராம்ருதம் என்ற நூலிலிருந்து தெரிய வருகிறது. அவருக்குப் பிறகுதான், 72 மேள ராகங்களுக்குப் பெயர் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். வேங்கடமகி இரட்டையாகப் பெயரிட்ட சுரங்கள் ஓர் அதிர்வெண் உள்ளதுதானா என்று விஞ்ஞான முறையில் ஒருவரும் ஆராய்ச்சி செய்யவில்லை. தன்னோக்கமாகப் பலர் பலவிதமாகச் சொல்லுகிறார்கள்.

தற்காலத்து மேனாட்டு இசையில், கருநாடக இசையின் மேள ராகங்களுக்குச் சரியான 4 இராகங்கள் இருக்கின்றன. டயடானிக் மேளத்தை மேஜர் மேளம் என்று இக்காலத்தில் சொல்லுகிறார்கள். மெலாடிக் மைனர் மேளம் (Melodic Minor Scale) என்பது, ஆரோகணத்தில் கௌரீ மனோஹரி மேள ராகம்; அவரோகணத்தில் நடபைரவி மேள ராகம். ஒத்திகைக் காகச் சில போது, ஆரோகண அவரோகணத்தில் கீரவாணி ராகமே உபயோகிக்கிறார்கள்.

பொதுவாக மேளம் என்பது ஒரு சட்டகம் போன்றது. இராகம் உருவாவதற்கு இன்னும் பல அமிசங்கள் வேண்டும். கருநாடக இசை இடைவிட்ட சுரங்களால் அமைக்கப்படவில்லை. வளைவுகள், கமகங்கள், சுரங்களைப் பிடிக்கும் வழிகள், அனுசுரங்கள் இவைகள் ஒருங்கு சேர்ந்து இராகம் உண்டாகிறது.

டயடானிக் மேளத்தைப் பற்றிக் கூறுமிடத்து, ஏழு இசைச் சுரங்களையும், அவற்றின் சார்புத் துடிப்பெண்களையும் பற்றிக் குறிப்பிட்டோம். இந்திய இசைக் கலைஞன் ஒத்தையோ அல்லது ஷட்ச பஞ்சமத்திற்குச் சுருதி கூட்டியுள்ள தம்புராவையோ சுருதியாகக் கொண்டு பாடுகிறான்.

மத்தியஸ்தாயியில் கமகங்களின் றி நீட்டித்து ஒலித்து, ச அல்லது ப வுடன் இணைந்து விடும் பல இசைச் சுரங்கள் உள்ளன என்று பௌதிக அறிஞர் கூறுகின்றனர். இவற்றுள் முக்கியமானவையும், அவற்றின் சார்புத் துடிப்பெண்களும் கீழே தரப்பட்டுள்ளன :

கருநாடக இசையில் மேற்கூறிய சுரங்கள் உள்ளன என்பது திண்ணம். சீ.சு

சுருதி,சுரம், இடைநிலை : இசையில் பயன்படும் நுட்பமான தொனிகளுக்குச் சுருதிகளென்று பெயர். எந்தச் சுருதி ஓர் இராகத்தில் பயன்படுகிறதோ, அந்தச் சுருதியே சுரம் என்னும் பெயர் பெறுகிறது. ஒரு ஸ்தாயியில் 7 சுரங்களும், 12 சுரஸ்தானங்களும், 22 சுருதிகளும் உள. ஸ, ப-வைத் தவிர, மற்ற 5 சுரங்களும் கோமள, தீவிரப் பேதங்களினால் 10 ஆகின்றன. இவையிரண்டும் சேர்ந்து 12 சுரஸ்தானங்களாகின்றன. சுருதி என்னும் பதத்திற்கு இடைவெளி