உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/560

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இசை

511

இசை

இந்தச் சுரம் நமக்குப் பயன்படாததால் அதற்கு மிக்க அருகிலுள்ளதும் நம் அனுபவத்திற்குற்றதுமான 64/45 எனும் சுரத்தை எடுத்துக் கொள்ளலாம்.

[64/45=1.422;729/512=1.424. ஆதலால், வித்தியாசம் மிக மிகச் சிறிதேயாகும்.]

[இந்த முறையில் 4/3 மத்யமம் கிடைப்பதில்லை.]

இது நமக்குப் பயன்படாததால் இதற்குப் பதிலாக, 45/32 எனும் சுரத்தை ஏற்கலாம்.

[1024/729=1.405 : 45/32=1.406. இங்கும் வித்தியாசம் மிக மிகச் சிறிதேயாகும்.]

[இந்த முறையில் 3/2 பஞ்சமம் கிடைப்பதில்லை.]
இவ்விதம் கிடைத்த சுருதியிடைவெளிகள் பின் வருமாறு: 1, 81/80, 256/243, 16/15, 10/9, 9/8, 32/27, 6/5, 5/4, 81/64, 4/3, 27/20, 45/32, 64/45, 40/27, 3/2, 128/81, 8/5, 5/3, 27/16, 16/9, 9/5, 15/8, 243/128.

அந்தர காந்தார முறையில் 25/24 என்ற சுருதியும் கிடைக்கும். இந்தச் சுருதிகளில் கையாளச் சௌகரியமும், காதுக்கினிமையும் உள்ள 22 சுருதிகளையே கருநாடக இசை முறையில் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த 22 இடைவெளிகளைக் கணக்கிடுவதிலும் பல கருத்து வேறுபாடுகள் இருந்து வருகின்றன. இந்த இடைவெளிகளைச் சுருதி என்றழைத்தார்கள். சுருதி என்பது காதால் தெளிவாகக் கேட்கக் கூடிய தன்மை உடையது என்று பொருள்படுவது. இந்த 22 சுருதிகளின் பெயர்களையும், அவைகளுக்குள்ள இடைவெளிகளையும் பேதங்களுடன் அட்டவணையில் காணலாம்.

ஒரே மேள இராகத்தில் உபயோகப்படுத்தப்படும் ஏழு சுரங்களுக்குள்ள இடைவெளிகளை நிச்சயப்படுத்த இந்த 22 சிறு இடைவெளிகளைப் பலவாறு சேர்க்க வேண்டி வருகிறது. ஓரிடை, இரண்டிடை