பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அச்சடித்தல்

25

அச்சடித்தல்

ஆப்பிரிக்கச் சுதேசிகள்; 170 ஐரோப்பியர்களும் வசிக்கின்றனர். பரப்பு; 481,351 ச.மைல் மக்; 4,111,796 (1950) தலைநகரம்; லுவான்டா; மக் 137,139 (1950)

அச்சடித்தல் (Printing): மேடு பள்ளங்கள் கொண்ட பரப்பொன்றின்மேல் மை தடவிக் காகித்த்தின்மேலோ, வேறொரு பரப்பின்மேலோ அழுத்தப் பரப்பிலுள்ள உருவத்தை அதில் தோற்றுவிப்பது அச்சடித்தல் எனப்படும். பல நூற்றாண்டுகளாகவே இம்முறை இந்தியாவிலும், சீனாவிலும் வழங்கி வந்துள்ளது. ஐரோப்பாவில் இது 15-ஆம் நூற்றாண்டில்தான் அறியப்பட்டது. சீனாவில் ஒரு பலகையில் எழுத்துக்களைச் செதுக்கிப் பக்கம் பக்கமாக அச்சடித்தார்கள். துணிகளில் அச்சடிக்க இம்முறை நம் நாட்டில் வழங்கியது. ஐரோப்பாவிலும் இதே அச்சடிப்பு முறை முதலில் ஏற்பட்டது. ஆனால் இது மிகத் தொல்லையானதாக இருந்த்தோடு இம்முறையில் ஒரு பக்கத்தை அச்சடிக்க பல நாள் பிடித்தது. ஆகையால் ஒவ்வொரு எழுத்திற்கும் ஒவ்வொரு அச்சாகச் செதுக்கிச் சொற்களுக்கேற்ற எழுத்துக்களைப் பயன்படுத்தினார்கள். உலோகத்தில் வார்க்கப்பட்ட எழுத்துக்கள் பின்னர் வழக்கத்திற்கு வந்தன.

தமிழ் நாட்டில் 16 ஆம் நூற்றாண்டில் மேனாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட மர எழுத்துக்களைக் கொண்டு சில கிருஸ்தவ நூல்கள் அச்சடிக்கப்பட்டன. தற்காலத்தில் உள்ளவைப்போன்ற அச்சு எழுத்துக்களை யுடைய அச்சகங்கள் பின்னர்த் தோன்றின. 1713-ல் தரங்கம்பாடியில் நிறுவப்பட்ட லூதரன் மிஷன் அச்சகமும், சென்னையில் தொடங்கிய எஸ்.பி.சி.கே. அச்சகமும் இந்தியாவிலேயே முதன் முதலில் இவ்வாறு அமைக்கப்பட்ட அச்கங்கள் எனலாம். இந்தியர் அச்சகங்களை நடத்தக்கூடாதென்ற சட்டம் 1835-ஆம் ஆண்டுவரை அமலில் இருந்ததால் நெடுநாள் வரையில் நம் நாட்டில் அச்சகங்கள் ஏற்படவில்லை.

அச்சுக்கோத்தல் (Composing): அச்செழுத்துக்களை கோக்க அவை பல அறைகள் கொண்ட தட்டுக்களில் வொவேறாக வைக்கப்பட்டிருக்கும். அச்சுக் கோப்பவர் அறைகளிலிருக்கும் எழுத்துக்களைத் தேவையானபோது எடுத்துக்கொண்டு தமது கையில் இருக்கும் சிறு கோப்புத் தட்டில் ( Composing stick) கோப்பார். பழக்கத்தினால் அவர் ஒவ்வொரு அறையிலும் எந்த எழுத்து உள்ளது என அறிந்து கைநிதானத்திலேயே அச்சுக்கோப்பார். கோப்புத்தட்டில் சிலவரிகள் சேர்ந்த்தும் அவற்றை அச்சுத்தட்டுக்கு ( Glley) மாற்றுவர்.

இவ்வாறு அச்சுத்தட்டுகளில் வரிகள் நிறைந்தவுடன் அவற்றிலுள்ள பிழைகளைத் திருத்துவதற்காக அவற்றை காகிதங்களில் அச்சடித்துப் பிழை திருத்துவதுவோர்க்கும் ஆசிரியருக்கும் அனுப்புவார்கள். இத்தாளுக்கு புரூப் (proof) என்று பெயர். அவர்கள் அவற்றைச் சரிபார்த்துப் பிழைகளையும் மற்ற மாறுதல்களையும் குறிப்பிட்டு அனுப்புவார்கள். அச்சுக் கோப்பவர் பிழைகளைச் சரிபடுத்தி இறுதி புரூப் (Final proof) எடுத்து அனுப்புவார்கள். இதன்பின்னர் அச்சுத்தட்டில் நிரம்பிய அச்சுக்கள் 8 அல்லது 16 பக்கங்களாகப் பிரிக்கப்பட்டுப் பெரிய தாள்களில் அச்சடிக்கப்படும், இப்படிப் பக்கங்ளாக்க் கோத்த அச்சுக்குப் பாரம் (Forme) என்று பெயர்.

அச்சுக்கோக்கும் எந்திரம் : கையினால் அ்ச்சுக் கோக்க அதிக நேரம் செலும். ஆகையால் இம்முறை பத்திகாலயங்களுக்கு ஏற்றதன்று. விரைவாக அச்சுக்கோக்கும் எந்திரங்கள் தோன்றின. இவற்றுள் லைனோ டைப் எந்திரம் (Monotype) என்பது தனித்தனியே அச்சுக்களை வார்த்துக் கோக்கிறது. இவை வேலைசெய்வது வியப்பைத் தரும்.

லைனோடைப் எந்திரம்
உதவி: ஹிந்து, சென்னை

லைனோ டைப் எந்திரத்தில் சாதாரண டைப்ரைட்டரில் இருப்பதுபோல் எழுத்துக்கள் குறிப்பிட்ட பொத்தன்கள் கொண்ட வரிசைகள் இருக்கும். ஏதாவதொரு பொத்தானை அழுத்தினால் அது சில கம்பிகளை இயக்கி அச்செழுத்துக்கள் கொண்ட பெட்டியிலிருந்து அப்பொத்தானுக்கேற்ற எழுத்தை வெளியே எடுத்து ஒரு கால்வாயின் வழியே ஓர் இடத்திற்குக் கொண்டுபோகும். பொத்தான்களை அழுத்திக்கொண்டேவந்தால் எழுத்துக்கள் வரிசையாக அவ்விடத்தை அடையும். ஒரு வரிக்கு வேண்டிய எழுத்துகள் சேர்ந்தவுடன் அது வார்படப் பெட்டி (Casting boox) என்ற கலத்திற்குள் எடுத்துச் செல்லப்படும். இதற்குள் உருகிய அச்சு ஈயம் இருக்கும். வார்க்கவேண்டிய வரி இதை அடைந்த்தும் உருகிய ஈயம் ஒரு குழாயின் வழியாக எழுத்துகளின் மேல் பாய்ந்து ஒரு வரி அச்சைத் தோற்றுவிக்கும். இது இறுகி விளிம்புகளில் சரியாகச் சீவப்பட்டு எந்திரத்திலிருக்கும் ஒரு அச்சுத் தட்டை அடையும். வரியை வார்த்தபின் எழுத்துக்கள் மீண்டும் த்த்தமக்குரிய அறைகளை அடைந்துவிடும். இந்த எந்திரத்தில் ஒவ்வொரு முறையும் புது அச்செழுத்துக்களைத் தயாரிப்பதால் அச்சுக்கள் தேயாமல்